தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.
வீடியோவில் 23:24 நிமிடத்தில் பார்க்கவும்
டிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.அதன் மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதிலும் வட சென்னை படத்தில் நார்த் மெட்ராஸ் பெண்ணாக நடித்து அசத்தி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அசிஸ்டன்ட் ஒருவர் தன்னை ஏமாற்றியது குறித்து கூறியுள்ளார். அதில், என்னிடம் அசிஸ்டன்ட்டாக வேலை செய்த ஒருவர் எனக்கு தெரியாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ரசிகர்களுக்கு என்னை பற்றி அப்டேட் செய்வது என்னுடைய வீட்டின் லாக்கர் நம்பரை எல்லாம் கொடுப்பது என்று செய்து இருக்கிறார்.
என்னுடன் அவர் ஒன்றரை வருடங்கள் அவர் வேலை செய்து இருக்கிறார். சரி, பரவாயி ல்லை தப்பு பண்ணியாச்சு அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பலர் அவர் மீது வழக்கு தொடர சொன்னார்கள். ஆனால், இது போல மற்றொருவருக்கு நடக்கக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். இப்படி எல்லாம் செய்யும் போது யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.