ஒரு அண்ணன் காதல் தோல்வியில், ஒரு அண்ணன் விபத்தில்- ரோட்டில் வேலை செய்து வாங்கிய சம்பளம் – ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா.

0
25355
aiswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-
Related image

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில்நடித்துள்ளார். ஆனால், “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.அவரும் ஒரு பிரபல நடிகர் தான். அது வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகரான மணிகண்டன் தான். இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார்

ஆனால், இவரை தவிர ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு 12 வயது இருக்கும்போது என்னுடைய மூத்த அண்ணன் இறந்துவிட்டார். அவர் பெயர் ராகவேந்திரா. அப்போது அவர் ஒரு பெண்ணைகாதலித்தார். இதனால் அவரது இறப்பு தற்கொலையாகொலையா என்று கூட எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை

-விளம்பரம்-

 அதே போல என்னுடைய இரண்டாவது அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட்படித்து முடித்துவிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தபின்னர் தான் , குடும்பத்தைக் காப்பாற்ற இன்னொருவருடைய சம்பளம் வருகிறது என்று என் அம்மாவுக்கு அத்தனை சந்தோஷம். ஆனால், அவரும் ஒரு சாலை விபத்தில இறந்துவிட்டார். அதன் பின்னர் நான் 11வது படிக்கும்போது ஒரு வேலைக்குப் போனேன். பெசன்ட் நகரில் இருக்கிற ஒரு சூப்பர் மார்கெட்டில் புதிதாக அறிமுகமான ஒரு சாஸை ரோட்டில் வருபவர்களிடம் ‘மேடம் இந்த சாஸை டேஸ்ட் பண்ணிப் பாருங்க’, ‘ சார் இதைச் சாப்பிட்டிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க’னு மார்க்கெட்டிங் செய்கிற வேலை அது.

அந்த வேலைக்காக எனக்கு ஒருநாளுக்கு 225 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க.அதன்பின்னர் , பர்த்டே பார்ட்டி மாதிரி நிறைய ஈவென்ட்ஸ் ஹோஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதன் மூலம் 500, 1,000-னு சம்பளம் வரும். அப்படி மாதம் 5,000 ரூபாய் சம்பாதிச்சேன். அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்க போவது யாரு, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் இந்த நிலைமைக்கு வந்து உள்ளாராம்.

Advertisement