‘ஒரு வேலை தான் சப்பிடுறேன், வீடு வீடா சோப்பு விக்குறேன் – பிரபல நடிகையின் மகளாக இருந்தும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா.

0
1496
aishwarya
- Advertisement -

வீடு வீடாக சோப்பு விற்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் சாந்தா மீனா. இவர் தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-
Actress aishwarya

அதனைத் தொடர்ந்து இவர் மில் தொழிலாளி, தையல்காரர், ராசுகுட்டி உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய பிறகு இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று இருக்கிறார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார்.

- Advertisement -

ஐஸ்வர்யா நடித்து இருக்கும் படம்:

தற்போது இவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் யானை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய பொருளாதார நிலை குறித்தும் சோப்பு விற்பது குறித்தும் பல விஷயங்களைப் பகிர்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். வருமானம் இல்லாமல் இருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும் என்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லாததால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டு இருக்கின்றேன்.

Actress aishwarya

ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

நல்ல சம்பளம் கிடைத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன். அதேசமயம் இப்போது நான் பார்க்கும் வேலை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டும் இல்லாமல் பலரும் இது குறித்து என்னிடம் நலம் விசாரிப்பது ரொம்ப சந்தோசமாக இருக்கு. எனக்கு யாரிடமும் பணம் தேவை இல்லை. என் பொருளை வாங்கினால் போதும். ஏனென்றால், இப்போது எனக்கு கடன் இல்லை. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், வேலை மட்டுமே இல்லை. நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்பட்டதில்லை, பெருமைப்படுகிறேன்.

-விளம்பரம்-

தான் சோப்பு விற்பது குறித்து ஐஸ்வர்யா சொன்னது:

நான் நான்கு பூனைக்களுடன் தனியாகத் தான் வாழ்கிறேன். யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். ஆனால், இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும். நான் பிழைத்தது சீரியலை வைத்துத் தான், சினிமாவில் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது. அதேபோல் எனக்கும் என்னுடைய அம்மாவிற்கும் இடையே பிரச்சனை என்று பல வதந்திகள் சோசியல் மீடியாவில் பரவியிருந்தது.

அம்மா இடையே ஏற்பட்ட பிரச்சனை:

உண்மை என்னவென்றால், என் அம்மா உடைய சொத்துக்கள் எல்லாம் அவர் கஷ்டப்பட்டு தனி மனுஷியா நின்று போராடியது. அதனால் நானும் சிறுவயதில் இருந்தே போராடி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். என் அம்மா என்னை படிக்க வைத்தார், எனக்கென ஒரு வகேரியரை கொடுத்தார். இதற்குமேல் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கேட்க விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கும் என் அம்மாவிற்கும் இருந்த பிரச்சினை என்பது தனிப்பட்ட பிரச்சனை. அதை நான் பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement