அட, ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி இந்த நடிகை தானா ? ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்திருக்காங்க.

0
2195
ayswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல படங்களில்நடித்துள்ளார். ஆனால், “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘காக்கா முட்டை’ படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதை கூட பெற்றிருந்தார். சமீபத்தில் இவரரது நடிப்பில் வெளியாகியுள்ள “வட சென்னை” படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.

- Advertisement -

ஆம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், அவரும் ஒரு பிரபல நடிகர் தான். அது வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகரான மணிகண்டன் தான். இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிவா மனசுல சக்தி தொடரில் நடித்து வருகிறார்.

ஆனால், இவரதும் மனைவியும் ஒரு நடிகை தான். ஆம், மணிகண்டனின் மனைவியான சோபியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான லட்சுமி படத்தில் டான்ஸ் மாஸ்டராக நடித்துள்ளார் சோபியா.

-விளம்பரம்-
Advertisement