53 வயதிலும் மருமகள் சமந்தாவிற்கு டப் கொடுக்கும் மாமியார் அமலா – இத நீங்களே பாருங்க.

0
6923
amala
- Advertisement -

தமிழ் திரையுலகில் 1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘மைதிலி என்னை காதலி’. இந்த படத்தினை டி.ராஜேந்தர் இயக்கி, நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக அமலா நடித்திருந்தார். இது தான் நடிகை அமலா அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘மெல்லத் திறந்தது கதவு, வேலைக்காரன், பூ.. பூவா பூத்திருக்கு, வேதம் புதிது, பேசும் படம், அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை,வெற்றி விழா, மௌனம் சம்மதம்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை அமலா. தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அமலா, தெலுங்கு – ஹிந்தி – கன்னடம் – மலையாளம் ஆகிய திரையுலகிலும் நுழைந்து சில படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா. இவர்களுடைய மகன் தான் இப்போது பிரபல ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அகில். நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி தான் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் தான் நடிகர் நாகசைத்தன்யா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் கணவர் இவர் தானாம். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது.

- Advertisement -

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

வழக்கமாக நடிகை சமந்தா ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ பதிவை வெளியிடுவார். தற்போது, சமந்தாவின் சின்ன மாமியார் அமலா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோ பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். லாக் டவுன் டைமில் அமலா ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் இவ்வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதே போல தற்பொழுது நடிகை அமலா யோகா செய்யும் புகைப்படம் வைரலாக பரவிக்கொண்டுள்ளது. நடிகை அமலாவின் வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement