கல்லூரி விழாவில் கவர்ச்சி ஆடையில் வந்தேனா? சர்ச்சைகளுக்கு அமலாபால் கொடுத்த பதிலடி

0
403
- Advertisement -

கல்லூரி விழாவிற்கு கவர்ச்சி ஆடை அணிந்து வந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை அமலாபால் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக அமலாபால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தான் இவருக்கு திருமணம் ஆகியிருந்தது. பின் கடந்த ஜூன் 11 ஆம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், அமலா பால் கர்ப்பமாக இருந்ததால் எந்த படங்களிலுமே நடிக்காமல் இருந்தார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘ஆடுஜீவிதம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது நடிகை அமலாபால் மீண்டும் படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் மலையாளத்தில் அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலியுடன் சேர்ந்து ‘லெவல் கிராஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அமலாபால் குறித்த சர்ச்சை:

இந்த படம் ஜூலை 26 ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமலாபால், ஆசிப் அலி இருவருமே கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு சென்றிருந்தார்கள். அங்கிருந்து மாணவர்களுடன் அமலாபால் ஜாலியாக உரையாடி நடனமும் ஆடியிருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமலா பால் இப்படி கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா? இதெல்லாம் ரொம்ப தவறான செயல் என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

அமலா பால் பேட்டி:

இதற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அமலாபால், எனக்கு வசதியாக இருக்கும் உடையை தான் நான் அணிந்து வந்தேன். இந்த உடையில் என்ன பிரச்சனை? எந்த உடையை போட வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. நான் பாரம்பரிய உடைகள் ஆன சேலையை அணிகிறேன், நவீன உடைகளையும் அணிகிறேன். உங்கள் பார்வையும், கேமராவையும் சரியாக வைத்தால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

-விளம்பரம்-

ஆடை சர்ச்சைக்கு அமலாபால் கொடுத்த விளக்கம்:

பார்ப்பவர்களிடம் தான் தவறு இருக்கிறது, என்னிடம் கிடையாது. கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் இப்படி நான் ஆடை அணிந்ததை தவறு என்று சொல்கிறார்கள். ஆனால், இதன் மூலம் நான் மாணவர்களுக்கு சொல்லும் செய்தி, உங்களுக்கு வசதியான ஆடையை நீங்கள் அணியுங்கள். ஏன் அதை இப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் அணிந்த ஆடை மாணவர்களுக்கு தவறாக படவில்லை. அவர்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. பார்ப்பவர்களுக்கு தான் அதில் பிரச்சனை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அமலா பால் திரைப்பயணம்:

மேலும், அமலா பால் அவர்கள் தமிழில் மைனா, தெய்வ திருமகள், தலைவா போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இதனிடையே அமலா பாலுக்கும் எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி மூன்றே ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பின் இவர் தன் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement