ஸ்கூலில் இருந்தே எனக்கு சூர்யா மீது தான் கிரஷ் – விவாகரத்து பெற்ற நடிகை கூறிய பதில் – ஷாக்கில் ரசிகர்கள்

0
396
amala
- Advertisement -

ஸ்கூல் பருவத்திலிருந்தே நடிகர் சூர்யா மீது கிரஸ் என்று நடிகை அமலாபால் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் காலடி எடுத்து வைத்து பிரபலம் அடைந்துள்ளனர். நயன்தாரா, பாவனா, மாளவிகா மோஹனன் என்று பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால்.

-விளம்பரம்-

இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அமலா பால் விவாகரத்து:

இதனை அடுத்து இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பிரிவிற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படம் மிக சர்ச்சை ஆகி இருந்தது.

அமலா பால் நடிக்கும் படங்கள்:

இதன் இடையில் இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்று கூட புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அது வெறும் போட்டோ ஷூட் தான் என்று கூறி இருந்தார் அமலா பால். தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ராஜூ வூட்ல பார்டி:

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக் காலத்திலிருந்தே எனக்கு சூர்யா மீது க்ரஷ் என்று நடிகை அமலா பால் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்டி. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை அமலாபால் கிரஷ்:

அந்த வீடியோவில் நடிகை அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா, அவரிடம் உங்களுக்கு எந்த ஆக்டர் மீது கிரஸ் என்று கேட்டார்? அதற்கு அமலா பால், பள்ளிக் காலத்திலிருந்தே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினார். இதனையடுத்து திருமணமாகாத சிங்கிளாக இருக்கும் நடிகர் ஒருவரை கூறுங்கள்? என்று கூறியபோதும் எஸ்டிஆர் என்று பதில் கூறினார் அமலாபால். இந்த பதிலைக் கேட்டவுடன் ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Advertisement