தெலுங்கு சினிமாவில் நடிக்காததை குறித்து அமலா பால் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். பின் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து இருக்கிறார் அமலா பால். இதனிடையே இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து 2014 ஆம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன மூன்றே ஆண்டுகளில் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தர்கள். மேலும், பிரிவிற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படம் மிக சர்ச்சை ஆகி இருந்தது.
அமலா பால் திரைப்பயணம்:
ஒரு இரவு முழுக்க ஆடையில்லாமல் இருக்கவேண்டிய சூழலில் சிக்கும் பெண்ணின் சூழ்நிலையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடாவர் படம்:
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்து இருக்கிறது. இப்படி இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தெலுங்கு மொழியில் மட்டும் அமலா பால் இது வரை ஐந்து படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார்.
அமலா பால் அளித்த பேட்டி:
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிக்காததை குறித்து சமீபத்தில் அமலா பால் பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் தெலுங்கு மொழியில் நடிக்க வந்த போது தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் இருந்ததை உணர்ந்தேன். அந்த குடும்ப நடிகர்களும், அவர்களுடைய ரசிகர்களுமே தெலுங்கு திரை உலகை ஆதிக்கம் செலுத்தி இருந்தார்கள். நான் தெலுங்கில் நடித்த போது படங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். கதாநாயகியை வெறும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
தெலுங்கு மொழியில் நடிக்காதற்கான காரணம்:
சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகளை மட்டுமே கதாநாயகி வருவார்கள். மற்ற திரைப் பகுதி முழுவதுமே ஹீரோ தான் ஆக்கிரமித்து இருப்பார். அது மட்டும் இல்லாமல் முழு கமர்சியல் படங்களை மட்டுமே அவர்கள் எடுப்பார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. அதே சமயம் தமிழ் சினிமாவில் நடிக்கும் அதிஷ்டமும் எனக்கு கிடைத்தது. மைனா படம் எனக்கு அனைவரது மத்தியிலும் நல்ல பேரை வாங்கி கொடுத்திருந்தது. அந்த படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.