அப்படியே அம்பிகா போலவே இருக்கும் அம்பிகா – ராதிகாவின் சகோதரி – இதுவரை இவங்கள பார்த்துள்ளீர்களா?

0
1401
ambika
- Advertisement -

முன்னணி நடிகைகளான அம்பிகா, ராதாவின் சகோதரி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே திரைத்துறையில் வாரிசு நடிகர்கள் நடிப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சகோதரிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. என்பது காலகட்டத்தில் அம்பிகா, ராதா இருவருமே முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருமே சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ரஜினிகாந்த் நடித்த எங்கேயோ கேட்ட குரல், கமலஹாசன் நடித்த காதல் பரிசு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இவர்கள் இருவரும் தான் சகோதரிகள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இவர்களுக்கு இன்னொரு சகோதரி இருக்கிறார். தற்போது அந்த இன்னொரு சகோதரியின் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ராதா-அம்பிகா சகோதரி:

அதாவது, ராதா- அம்பிகா இவர்கள் இருவரின் சகோதரி பெயர் மல்லிகா. இந்நிலையில் சமீபத்தில் நடிகை அம்பிகா அவர்கள் தன்னுடைய சகோதரி மல்லிகாவுடன் சேர்ந்து ரயில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு தற்போது நான் என் சகோதிரி உடன் ரயில் பயணம் செல்கிறேன் என்று கூறி ரயில் பயணத்தின் போது வாட்டர் பாட்டில், நியூஸ் பேப்பர், பழங்கள், பொரிகள் எடுத்து செல்வதையும் கூறியிருக்கிறார்.

தற்போது அம்பிகா பதிவிட்ட இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே இவர்கள் தான் அம்பிகாவின் மற்றொரு சகோதரியா! என்று ஆச்சரியத்தில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா துறை உலகில் 80 மற்றும் 90களில் புகழ்பெற்ற ஹீரோயினியாக கலக்கி வந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் ரஜினி, கமல் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவர் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். நடிகை அம்பிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பட்டையை கிளப்பினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.அம்பிகா

Advertisement