அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க, இன்பெக்சனே ஆகிடிச்சி – தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அம்மு அபிராமி

0
710
- Advertisement -

ட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து ஆதங்கத்துடன் நடிகை அம்மு அபிராமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக அம்மு அபிராமி இருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதற்கு முன் அம்மு அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ராட்சசன் படத்தில் தான். அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அம்மு அபிராமி.

- Advertisement -

அம்மு அபிராமி குறித்த தகவல்:

இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அம்மு அபிராமி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இரண்டாவது இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.

Ammu

கண்ணகி படம்:

தற்போது இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் வெளியான பாபா பிளாக் ஷீப் என்ற படத்தின் மூலம் அம்மு அபிராமி கதாநாயகியாக அறிமுகமானார்.தற்போது அம்மு நடிப்பில் வெளியாகி இருக்கும் கண்ணகி. அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, அபிராமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அம்மு அபிராமி பேட்டி:

ஷான் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனின்போது அம்மு அபிராமி பேட்டியில், பல கோடிகளில் போட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால், நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. சில படங்களில் பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் ரொம்பவே நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

வெளுத்து வாங்கிய அம்மு:

வெளியில் ஷூட்டிங்க் செய்யும் போது அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் எப்படி சகித்துக் கொள்ள முடியும். ரெடிமேட் டாய்லெட் இருக்கும்போது அதை சூட்டிங் இடத்தில் வைக்க வேண்டியது ஒரு அடிப்படை உரிமை தானே? கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போய் எனக்கு பலமுறை இன்பெக்சன் எல்லாம் ஆகி இருக்கிறது. முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டும் தான் கேரவன் வைத்திருக்கிறார்கள். ஆனால், வளரும் நடிகர்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட் என அனைவரும் மனுஷங்க தான். இந்த விஷயத்தில் எல்லாம் சிக்கனம் செய்து அப்படி யாருக்கு படம் எடுத்து வெளியிடப் போறீங்க? எல்லோரையும் ஒரே மாதிரி பாருங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement