உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை சந்தித்து இப்படி ஒரு பரிசை கொடுத்த தமிழ் நடிகை.

0
472
mkstalin
- Advertisement -

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா தந்த பரிசு தற்போது தமிழக அரசியலின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா அரசியல் பக்கம் சென்று விட்டார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதிலும் தற்போது இவர் ஆந்திர அரசியலில் முழுநேரமாக களமிறங்கியிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவறும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவருமான நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி நடிகை ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆந்திரா நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா:

பின்னர் அந்த பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் ரோஜா இருக்கிறார். இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எம்எல்ஏ ரோஜா அவர்கள் பட்டு சால்வை ஒன்றை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வழங்கி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா அவர்கள் சென்னை தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

தமிழக முதல்வரை சந்தித்து ரோஜா அளித்த பேட்டி:

பின் அது தொடர்பாக ரோஜா பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அப்போது அதில் ரோஜா கூறியிருப்பது, தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நகரி தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ்வழிக் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தேவைப்படுகிறது. இதை வழங்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். பின் விஜயபுரம் மண்டலத்தில் ஆந்திர அரசு 5600 ஏக்கர் APISC கையகப்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

தமிழக முதல்வரிடம் ரோஜா வைத்த கோரிக்கை:

நெடுபுரம் முதல் அரக்கோணம் வரை சாலை அமைக்க தமிழகத்திலிருந்து 9 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அவர் சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் நெசவு தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் மருத்துவ உதவிக்காக சென்னைக்கு தான் வருகிறார்கள். அவர்களுக்கு சிலநேரம் எல்லைப்பகுதியில் அனுமதி கிடைப்பதில்லை. அதனால் எந்த தடையும் இல்லாமல் அவர்கள் வந்து சேர உதவி செய்ய வேண்டும்.

ஸ்டாலின் உருவம் பொருந்திய சால்வை:

பின் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழகமும் ஆந்திர பகுதியில் உள்ள நெசவாளர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறோம். அதேபோல் முதல்வரும் என்னுடன் பேசும்போது ரொம்ப நாள் பழகியவர் போல நட்பு உரிமையோடு பேசினார். நான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். பின் ஆந்திர நகரி நெசவாளர் பட்டு துணியால் ஸ்டாலின் புகைப்படம் நெய்யப்பட்ட சால்வையை முதல்வர் முக ஸ்டாலின் இடம் நேரில் சென்று வழங்கினோம் என்று கூறி இருக்கிறார். அப்போது எடுத்த அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement