அட கொடுமையே, பல்வேறு தகவலை சொல்லிவந்த மதுவந்திக்கு விரைவில் விவாகரத்தாம்.

0
14097
madhuvanthi
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஒய்.ஜி. மகேந்திரன். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் தான் மதுவந்தி. இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

-விளம்பரம்-
மதுவந்தி

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி. இது தான் நடிகை மதுவந்தி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் மதுவந்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘கடம்பன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார் நடிகை மதுவந்தி. அதன் பிறகு வெள்ளித் திரையுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மதுவந்தி, சின்னத் திரையிலும் நுழையலாம் என்று முடிவெடுத்தார். சன் டிவியில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘வாணி ராணி’.

Trumpeting the triumph - The Hindu

பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்த இந்த சீரியலில் ‘சந்திரிகா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மதுவந்தி. அருண் என்பவரை மதுவந்தி காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தான் இந்த அருண் என்பது குறிப்பிடத்தக்கது. அருண், மதுவந்தி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது அருண், மதுவந்தி இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Vijaya Chamundeswari Wiki, Age, Husband, Family, Children ...
இரண்டு மகன்களுடன் விஜய சாமுண்டீஸ்வரி – கண்ணாடி அணிந்திருப்பவர் மதுவந்தியின் கணவர்.

இந்நிலையில், மதுவந்தி சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று கொண்டதாக அவரின் விக்கிப்பீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக நடிகை மதுவந்தி பேசுகையில் “நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்து விடலாம் என்று பரஸ்பர புரிதலுடன் முடிவு எடுத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் எங்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இப்போது திடீரென ‘கொரோனா’ பிரச்சனை வந்தமையால், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement