தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார். இறுதியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார் ஆண்ட்ரியா.
அதே போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2 ‘ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை எடுக்கும் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படமும் ஒரு வித்யாசமான பேய் படமாக அமைந்து இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான்.
இதையும் பாருங்க : கைது செய்யப்பட்ட கிஷோர், தி மு க ஆட்சியை கலைக்க சொன்ன மாரிதாஸ் – விஜய் பட இயக்குனர் விட்ட சவால்.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. மிஸ்கின் தனது திரைப்பயணத்தில் இரண்டம் பாகமாக எடுக்கும் முதல் படம் இது தான். இப்படி ஒரு நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகை ஆண்டிரியா, வட சென்னை படத்தில் நிர்வாண காட்சியில் நடித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதே போல மிஸ்கின் படங்களில் நிர்வாண காட்சிகள் என்பது மிகவும் சர்வ சாதாரணம் தான். இதுவரை நடிகர்களை நிர்வாணமாக நடிக்க வைத்த மிஸ்கின் தற்போது நடிகையையும் நிர்வாண காட்சியில் நடிக்க வைக்கப்போகிறாரா என்பதை படம் வந்த பின் தான் பார்க்க வேண்டும்.