கைது செய்யப்பட்ட கிஷோர், தி மு க ஆட்சியை கலைக்க சொன்ன மாரிதாஸ் – விஜய் பட இயக்குனர் விட்ட சவால்.

0
1862
mari
- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே. ஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பெண் பத்திரிகையாளரை தர குறைவாக பேசிய குற்றத்திற்கும் சேர்த்து இவர் மீது வழக்கு தொடரப்பட்டுளது. தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் கிஷோர் கே சாமி, தீவிர பா ஜ க ஆதரவாளர்.

-விளம்பரம்-
Kishore K Swamy - Amazon Prime's #SooraraiPottru is supposed to be a story  on captain Gopinath , who under the garb of taking the flying to the common  man, actually single handedly

இதனால் இவர் தி மு க கட்சி குறித்தும் அதில் உள்ள தலைவர் மற்றும் மூத்த நபர்கள் குறித்தும் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் அவதூறாக பேசி வந்தார். இப்படி ஒரு நிலையில் திமுக-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐடி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10-ம் தேதி கிஷோர் கே சாமியை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

- Advertisement -

அந்த புகாரில், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே. ஸ்வாமிமீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு அவர் மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக பிரபல யூடுயூப் விமர்சகரான மாரிதாஸ் குரல் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள விஜய்யின் சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன், இவ்வளவு கீழ்த்தரமாக பேசுறது கருத்து சுந்தந்திரமா? இந்த நாய கைது பண்ணதுக்கு ஆட்சிய கலைப்ப? சும்மா ஸ்லேட்ல எழுதி கலைச்சு காட்டுடா…ஆம்பளையா இருந்தா என்று பதிவிட்டு சமூக வலைதளத்தில் கிஷோர் கே சாமி கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவிட்ட ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement