பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு முன்பாகவே நடித்துள்ள ஆண்ட்ரியா.

0
2123
Andrea
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இது தான் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடித்திருந்தார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார்.

-விளம்பரம்-
DON'T PANIC: Kanda Naal Mudhal-Movie Review

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தல’ அஜித்தின் ‘மங்காத்தா’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘உத்தம வில்லன், விஸ்வரூபம் 1 & 2’, ஜீவாவின் ‘என்றென்றும் புன்னகை’, சுந்தர்.சி-யின் ‘அரண்மனை’, சிம்புவின் ‘இது நம்ம ஆளு’, விஷாலின் ‘துப்பறிவாளன்’, தனுஷின் ‘வடசென்னை’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஆண்ட்ரியா.

இதையும் பாருங்க : மணிவண்ணனின் மகனா இது? தற்போது எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் பாருங்க.

- Advertisement -

தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக மலையாளத் திரையுலகிலும் நுழையலாம் என்று முடிவெடுத்தார். மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம், தொப்பிள் ஜொப்பான்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இவர் கமலுடன் நடித்த ‘விஸ்வரூபம் 1 & 2’ ஆகிய இரண்டு படங்களுமே ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு பிரபல பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. ‘நீ சன்னோ நியூ மூனோ, ஏக் தோ தீன், மாமா டவுசர், கூகுல் கூகுல்’ போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார். நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது, நடிகை ஆண்ட்ரியா ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்கு முன்பே ஒரு படத்தில் நடித்திருப்பதாக ஒரு சர்ப்ரைஸ் தகவல் வெளி வந்திருக்கிறது. 2005-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘கண்ட நாள் முதல்’.

-விளம்பரம்-

இதில் ஹீரோவாக பிரசன்னா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கார்த்திக் குமார், லக்ஷ்மி, ரேவதி, தேவதர்ஷினி, ஜெகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தினை இயக்குநர் வி.ப்ரியா இயக்கியிருந்தார். இதில் நடிகை ஆண்ட்ரியா மிக சிறிய வேடத்தில் வலம் வந்திருக்கிறாராம். அவர் வந்த காட்சியின் புகைப்படம் இப்போது வெளி வந்திருக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement