வட சென்னை படத்தில் அப்படி நடித்ததால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது -நடிகை ஆண்டிரியா வேதனை.

0
1610
andrea

தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டுகாலமாக பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் சினிமா உலகில் அறிமுகமானார். கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் பாடியதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு பின்னர் தான் சினிமாவில் நடிகையாக மாறினார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களின் மூலம் தான் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். நடிகை ஆண்ட்ரியா மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார். இவர் கடைசியாக வடசென்னை படத்தில் நடித்து இருந்தார்.

Image result for andrea in vada chennai

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வட சென்னை. இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதை. இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பு நிறுவனம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க க்ரைம், திரில்லர், கேங்ஸ்டர் படம். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சந்திரா வேடத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்துக்காக பல பேர் இவரை விமர்சன ரீதியாக பாராட்டினார்கள். இருந்தாலும் ஆண்ட்ரியா அவர்கள் இந்த படத்தில் சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் வட சென்னை படத்தின் மூலம் தனக்கு நேர்ந்த பிரச்சனைகளை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, வடசென்னை படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு எதிர் காலத்தில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த படத்தில் நான் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருப்பது தொடர்ந்து பல படங்களில் அதே மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

-விளம்பரம்-
Image result for andrea in vada chennai

ஆனால், எனக்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அந்த படத்தில் நடித்தது நினைத்து எனக்கு கஷ்டமாக இருக்கிறது. தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனிமேல் நான் சம்பளம் குறைவாக இருந்தாலும் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. மாஸ்டர் படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று உள்ளது. இதனை தொடர்ந்து இவர் ‘கா, வட்டம், மாளிகை, அரண்மனை 3’ போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement