இது அவன் என்னை தாக்கும் முன் எடுத்த புகைப்படம் – காதலனின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகிய தமிழ் பட நடிகை.

0
771
vikraman
- Advertisement -

கொடூரமாக தன்னுடைய முன்னாள் காதலன் தாக்கியதாக நடிகை அனிகா விக்ரமன் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள மொழியில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் அனிகா விக்கிரமன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் தமிழில் கே, விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா விக்ரமன்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் அனூப் பிள்ளை என்பவரை பல ஆண்டு காலமாக காதலித்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை தாக்கியதாக நடிகை அனிகா விக்ரமன் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகை அனிகா விக்ரமனை தன்னுடைய முன்னாள் காதலர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கி துன்புறுத்தி இருப்பதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயங்களை புகைப்படங்களுடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

அனிகா விக்ரமன் அளித்த புகார்:

அது மட்டும் இல்லாமல் இது குறித்து தன்னுடைய முன்னாள் காதலன் மீது காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார் அனிகா. அந்த புகாரில் நடிகை அனிகா விக்ரமன் கூறியிருப்பது, என்னுடைய முன்னாள் காதலன் உடல் அளவிலும், மனளவிலும் பல வருடங்களாகவே என்னை துன்புறுத்தி வந்திருக்கிறான். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்தபோது அவன் என்னை அடித்து துன்புறுத்தினான்.

முன்னாள் காதலன் செய்த கொடுமைகள்:

அந்த நேரத்தில் தான் செய்த தவறுக்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டிருந்தான். அதனால் நான் புகார் அளிக்கவில்லை. இதைப்பற்றி நான் எதுவும் பேசவில்லை. இரண்டாவது முறை அவர் என்னை அடித்தார். அப்போது நான் போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால், அவர் போலீஸிடம் பணம் கொடுத்து தப்பித்து விட்டார். இதனால் போலீஸ் தன் பக்கம் இருப்பதை மனதில் வைத்துக் கொண்டு அவர் என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார். பின் நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது அவர் என்னை சராமாரியாக அடித்தார்.

-விளம்பரம்-

புகாரில் அனிகா சொன்னது:

பிறகு அவர் என் மேல் ஏறி அமர்ந்து வாய் மற்றும் மூக்கில் தாக்கி காயப்பட்ட முகத்துடன் எப்படி நீ நடிப்பாய்? என்று கேட்டார். இதனால் குணமடைய பல நாட்கள் ஆனது. அவனுடைய கொடுமைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் அவனை மன்னிக்கவும் முடியாது. அவன் இப்போது நியூயார்க்கில் தலைமறைவாக இருக்கிறான் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement