லாக் டவுன் : ரஜினி பட ஹீரோயின் வீட்டில் பார்ட்டி? போலீஸார் அதிரடி சோதனை. புகார் அளித்த வாட்சமேனிடம் வாக்கு வாதம்.

0
30875
anita
- Advertisement -

தமிழ் திரையுலகில் 1983-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தாய் வீடு’. இந்த படத்தினை ஆர்.தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை அனிதா ராஜ் நடித்திருந்தார். இது தான் நடிகை அனிதா ராஜ் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் ஜெய் ஷங்கர், விஜய குமார், எம்.என். நம்பியார், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் ஹீரோயினாக நடித்த அனிதா ராஜ், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

- Advertisement -

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் மும்பையில் வசித்து வரும் நடிகை அனிதா ராஜ் வீட்டில் பார்ட்டி நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகை அனிதா ராஜின் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பின், அனிதா ராஜ் போலீஸாரிடம் “என்னுடைய கணவர் சுனில் ஒரு டாக்டர்.

-விளம்பரம்-

அவரின் நெருங்கிய நண்பர் ஒரு அவசர மருத்துவ உதவிக்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அந்த நபருடன் அவருடைய மனைவியும் வந்திருந்தார். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலும், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் மட்டுமே அவர்களுக்கு உதவி செய்ய என் கணவர் முன் வந்து வீட்டுக்கு வர சம்மதித்தார். இது தான் நடந்த சம்பவம். ஆனால், அக்கம் பக்கத்தினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்” என்று அனிதா ராஜ் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸார், அனிதா ராஜிடம் மன்னிப்பு கேட்டு சென்று விட்டனராம்.

இது ஒருபுறம் இருக்க வீட்டில் பார்ட்டி நடப்பதாக போலீஸ் புகார் அளித்த காவலாளியிடன் அனிதா வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோ, அனிதா வீட்டில் போலீஸ் வந்து சென்ற பின்னர் எடுத்த வீடியோ என்றும் கூறப்படுகிறது.

Advertisement