ஒரு சில டைம்ல எல்ல மீறி போகும், அந்த காட்சிக்கு அப்புறம் கேரவன் உள்ள போய் அழுதேன் – அஞ்சலி பகிர்ந்த கதை.

0
881
anjali
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும், நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

நடிகை அஞ்சலி கொடுக்கும் கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்க கூடியவர்.அதற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் திரைப்படத்தில் சினிமா உலகிற்கு தூக்கி விட்டது என்று சொல்லலாம். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியான ஃபால் திரைப்படம் prime + hotstarல் வெளியாக நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. இப்படத்தை தொடர்ந்து RC15 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்திருந்த பேட்டியில் நெருக்கமான காட்சியில் நடிப்பது கடினமா அல்லது முத்தம் கொடுக்கும் கட்சியில் நடிப்பது கடினமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அஞ்சலி உடனே தான் அந்தரங்க காட்சியில் நடிப்பது கடினம் என்று கூறினார். நான் எல்லா காட்சிகளிலும் நடிப்பதாகத்தான் எண்ணுகிறேன். ஆனால் அது ஒரு நெருக்கமான அந்தரங்க காட்சியாக வரும் போதுதான் அது என்னுடைய எல்லையை மீறி செல்லும் போது சில சமயங்களில் நான் கேரவனுக்குச் சென்று அழுதிருக்கிறேன். ஆனால் நான் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டு இதனால் நாம் அதனை நடித்து கொடுத்தான் ஆக வேண்டும்.

-விளம்பரம்-

முத்தக் காட்சியை பற்றி பேசும்போது அஞ்சலி கூறியது `ஒரு சில சமயங்களில் அந்த வகையான காட்சிகள் நம்மை தூண்டிவிடுமாறு இருக்கும், ஆனால் நம்முடன் நடிக்கும் நபர்கள் ஒரு கட்டத்திற்கு மேலே செல்ல மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் இதனை நான் மக்களின் முன்பு நடிக்கிறோம் எப்படி இருக்கும் என்று கூறினார். மேலும் ஓரு படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு குறைவாக ஆட்கள் இருந்தாலும் குறைந்த பட்சம் 15 பேர் இருப்பார்கள் என்று அஞ்சலி கூறினார்.

anjali

மேலும் தான் ஒரு உறவில் இருந்ததாக கூறிய அவர் `நான் ஒரு Toxic உறவில் இருந்தேன். அந்த உறவின் பெயரை நான் குறிப்பிடவில்லை, அந்த உறவு நான் நினைத்த படி இருந்ததில்லை. அந்த உறவு என்பது ஒரு கட்டத்தல் நாம் செய்யும் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது உறவை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று நம்மை நினைக்க வைக்க தோன்றும், ஒரு ஆண் திருமணம் செய்த் பிறகு வேலைக்கு செல்லும் போது ஒரு பெண்ணும் அதனை செய்யலாம் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement