நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை அனு இம்மானுவேல் வாங்கிய கார். வைரலாகும் புகைப்படம்.

0
5820
Anu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.

ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை அனு இம்மானுவேல் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகை அனு இம்மானுவேல் அவர்கள் புதியதாக கருப்பு நிறத்தில் ஒரு கார் ஒன்று வாங்கி உள்ளார். தற்போது நடிகை அனு இம்மானுவேல் அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து உள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து நடிகை அனு இம்மானுவேலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement