கவுண்டமணி, செந்தில் குறித்து நடிகை அனுஜா ரெட்டி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அனுஜா ரெட்டி. இவர் தன்னுடைய 14 வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார். இவர் 1986 ஆம் ஆண்டு இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘முதல் வசந்தம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதிலும், இவர் கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் விலகிவிட்டார்.
அனுஜா ரெட்டி குறித்த தகவல்:
அதோடு சில ஆண்டுகளாகவே இவரை குறித்து எந்த செய்தியும் இணையத்தில் வராமல் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுஜா ரெட்டி, சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் என்னுடன் நடித்த சக நடிகர்கள் நடிப்பு சம்பந்தமாக பல உதவிகள் செய்தார்கள். அந்த வகையில் செந்தில் சார் ரொம்ப நல்லவர், நிறைய விஷயம் சொல்லித் தந்தார். ஹெட் வெயிட் எல்லாம் காட்டாதவர்.
கவுண்டமணி பற்றி சொன்னது:
கவுண்டமணியும் நல்லவர் தான். ஆனால், அவர் ரொம்ப ஆட்டிடியூட் காட்டுவார். செந்தில் சார் அப்படி கிடையாது. கவுண்டமணியிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. சூட்டிங் ஸ்பாட்டிலேயே நிறைய விஷயங்களை செய்வார். அதனால் தான் அவர் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி.
கவுண்டமணி குறித்த தகவல்:
அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் முதலில் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் இவர் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.