மீண்டும் சுதப்பும் சிம்பு – ஓடாத படத்தை தூசி தட்டி இரண்டாம் பாகம் எடுக்கப் போறாராம். என்னத்த சொல்ல.

0
1161
simbu

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியாவின் 5-வதாக தயாரிப்பாக‘ஈஸ்வரன்’ படம் உருவாகியுள்ளது.  திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

Podaa Podi - Disney+ Hotstar

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு போடா போடி படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பெரும் பிளாப் அடைந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தினை பதம்குமார் தயாரிக்க இருக்கிறார். படத்தில் சிம்புக்கு ஜோடியாக ரித்திகா பவுல் என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை தயாரிப்பாளர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement