சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்து விட்டேன். உருக்கமாக சொன்ன அனுஷ்கா.

0
10364
anushkashetty
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார். நடிகை அனுஷ்கா அவர்கள் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் வந்த ‘சூப்பர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இரண்டு படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் இவர் டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தினார்.

-விளம்பரம்-

பின் தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் என்று சொல்லலாம். அதன் பின்னர் தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், மாதவன் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் அனுஷ்கா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா அவர்கள் நடித்த படங்கள் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வரப்படுகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : வீட்டில் இருந்தபடியே கொண்டாடுங்க. பிரசன்னா பதிவிட்ட வீடியோ.

இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி யோகா பயிற்சி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது நடிகை அனுஷ்காவுக்கு 38 வயது ஆகிறது. இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதோடு சோசியல் மீடியாவில் இவர் திருமணம் பற்றி பல வதந்திகளும், கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து அனுஷ்காவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for anushka shetty prabhas

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அனுஷ்கா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் தன்னுடைய காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, நான் 2008 ஆம் ஆண்டு ஒருவரை காதலித்தேன். அது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு சந்தோஷமாகவும், அற்புதமாகவும் இருந்தது. ஆனால், எனக்கு அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.

நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை நான் சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். மேலும், எனக்கு பதினைந்து வருடங்களாக பிரபாஸை தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. படத்தில் நாங்கள் ஜோடியாக நடிப்பதால் எங்களை இணைத்து பேசுகிறார்கள்.

அப்படி எல்லாம் எங்களுக்குள் எதுவும் இல்லை. எனக்கு பிரபாஸ் ஒரு நல்ல நண்பர் என்று கூறினார். தற்போது இவர் கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்திலும், நிசப்தம் என்ற படத்திலும் அனுஷ்கா நடித்து வருகிறார்.

Advertisement