வீட்டில் இருந்தபடியே கொண்டாடுங்க. பிரசன்னா பதிவிட்ட வீடியோ.

0
7029
prasanna
- Advertisement -

கடந்த 2012 ஆம் ஆண்டு 23 வயதான பிஸியோதெரபி மாணவி நிர்பயா திரைப்படம் பார்த்துவிட்டு தன் ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பர்களும் இதில் கொடூரமாக தாக்கப்பட்டார்கள். மிகவும் கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள். பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் நிர்பயா உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சகோதரர் முகேஷ் சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-
Image result for nirbhaya case

- Advertisement -

மேலும், இதில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம்சிங் 2013 ஆம் ஆண்டு சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தார்கள். இந்நிலையில் டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் இந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : 3000 வாங்கியவருக்கு 80000. நிர்பயா வழக்கு மிருகங்களை தூக்கிலிட்ட இவர் யார் தெரியுமா ?

-விளம்பரம்-

சில மாதங்களுக்கு முன்பு தான் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு கருணை மனுக்களையும் குடியசுத் தலைவர் நிராகரித்து விட்டார். மேலும், இன்று இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள் நிர்பயா குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஏன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறுகிறேன் என்று பார்க்கிறீர்களா, நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். அதே போல் இன்னைக்கு நான்கு அரக்கர்களை தூக்கிலிட்டு உள்ளார்கள்.

இதைவிட தீபாவளி கொண்டாடுவதற்கு வேறு ஒரு சிறப்பான காரணம் தேவையில்லை. இந்த தீபாவளியை நான்கு மடங்காக கொண்டாட முடியும். ஆனால், நம் எல்லாருக்கும் தெரியும் தற்போது உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. அரசாங்கமே ஆடிப்போய் உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. இது உலகத்தை அச்சுறுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுகுறித்து பயப்படாமல் எளிமையான சுகாதார முறைகளை கடைபிடித்தாலே போதும். கொரானாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். யாரும் பயப்படாமல் இதை எதிர்கொள்ளுங்கள். நிர்பயா ஆத்மா சாந்தியடையும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறினார்.

அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் ஜெயில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இது இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆசான் தேவி கூறியது, எங்களுக்கு இன்று நீதி கிடைத்து விட்டது. இதை நாட்டில் உள்ள பெண்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கும் அரசுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி என்று உணர்ச்சி வசமாக பேசினார்.

Advertisement