தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார், அதன் பின் இவர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும், சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை இந்திய முழுவதும் பிரபலமாக்கியது ‘பாகுபலி’ படம் தான். இந்த படத்தை ராஜமவுலி இயக்கியிருந்தார். இந்த படம் பல சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மக்கள் மத்தியில் தேவசேனாகவே பதித்து விட்டார். அதோடு இந்த படத்தின் மூலம் தான் அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அனுஷ்கா திரைப்பயணம்:
இதனை அடுத்து இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த “பாகமதி” என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு அனுஷ்கா பெரிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம், இவரின் உடல் எடை அதிகரித்தது. அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பின் நீண்ட இடைவெளிக்கு பின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் மூலம் அனுஷ்கா கம்பேக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காதி.

அனுஷ்கா குறித்த தகவல்:
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படத்தில் அனுஷ்காவின் ஆக்சன் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது
இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் இருந்து விலக இருப்பதாக நடிகை அனுஷ்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனுஷ்கா அறிக்கை:
வெளிச்சத்திற்காக நீல ஒளியை விற்கிறேன். உலகத்தோடு மீண்டும் இணைவதற்கும் ஸ்க்ரோலிங்கைத் தாண்டி வேலை செய்வதற்கும் சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலகி இருக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் உண்மையில் தொடங்கிய இடத்திற்கு செல்வோம். நல்ல கதைகளுடன் இதே போல அதிக அன்புடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். எப்போதும் மகிழ்வோடு இருங்கள் என்று கூறியிருந்தார். அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அனுஷ்கா, நான் எதிர்மறையான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சில படங்களில் கதை கேட்டு இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






