தனக்கு நேர்ந்த ‘மீடூ’ அனுபவம் பற்றி அனுஷ்கா – இவங்களுக்குமா இப்படி நடந்திருக்கு.

0
1103
anushka

பொதுவாகவே சினிமா உலகில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக கூறி நடிகைகளை பயன்படுத்திக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமீப காலமாக இது குறித்து மீடு பிரச்சனை சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. நடிகை ஸ்ரீரெட்டி முதல் சின்மயி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த மீடு பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார்கள். முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை என பலரும் இந்தப் பிரச்சினையை சந்தித்து உள்ளார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.

- Advertisement -

இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருக்கிறது. இறுதியாக நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா கூறியதாவது, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.

Image

திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது. பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை. ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள்

-விளம்பரம்-
Advertisement