மோசமாக கமன்ட் செய்த நபர். நேரில் சென்று தக்க பாடம் புகட்டிய நடிகை. என்ன செய்துள்ளார் பாருங்க.

0
998
Aparna
- Advertisement -

மோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா நாயர். இவர் காக்டெயில், காயம், பியூட்டிஃபுல், தட்டத்தின் மறயத்து, சைலன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் தமிழில் எதுவும் நடக்கும் என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். அபர்ணா நாயர் அவர்கள் எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும், இவர் அவ்வப்போது தனது படங்கள் குறித்து செய்திகள், புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அபர்ணா நாயர் அவர்கள் சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு ஒருவர் ஆபாசமான கருத்தைப் பதிவிட்டார்.உடனே அதை அபர்ணா நாயர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துஇருந்தார் . அதோடு இது குறித்து அபர்ணா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது, இந்தப் பக்கத்தை நான் எனது நல விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் பயன்படுத்துகிறேன்.

- Advertisement -

யாரும் வந்து ஆபாசமான எண்ணங்கள் உடன் தங்கள் பாலியல் கற்பனைகளுக்கு அடித்தளம் போடும் இடம் கிடையாது. உங்களது பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்பவள் கிடையாது.இப்படி ஒரு மோசமான கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்துங்கள். இந்த மாதிரி நடத்தைகளை நான் தவிர்ப்பேன் என்றோ அல்லது நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதோ அர்த்தம் இல்லை. இது போன்ற அருவருக்கத்தக்க செயலை என்னால் சகித்து கொள்ள முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

Aparna

இந்த நிலையில் அந்த நபர் மீது கேரள சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். பின்னர் இரண்டு நாட்களில் அந்த நபர் பிடிபட, அபர்ணா நாயர் அந்த நபரை காவல் நிலையத்துக்கு சந்திக்க சென்று செம டோஸ் விட்டுள்ளார். அந்த நபர் பின்னர் மன்னிப்பு கேட்டதாலும், மேலும், அவரின் ஏழ்மை மற்றும் குடும்பம் காரணமாக அவர் மீது கொடுத்த புகாரை வாப்பஸ் வாங்கி கொண்டார். மேலும், இதுபோல எந்த பெண்ணையும் தவறாக பேச மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டுள்ளார் அபர்ணா. மேலும், அந்த நபர் செய்த கமன்ட் அனைத்தையும் டெலீட் செய்து விட்டார் அபர்ணா நாயர்

-விளம்பரம்-
Advertisement