சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லியாக அர்ச்சனா இருந்தார். இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலின் மூலம் அர்ச்சனாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இதை அடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து இருந்தார்.

பின் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்று இருந்தார். இதை அடுத்து அர்ச்சனா ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் டி மான்டி காலனி 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அருள்நிதியின் நடிப்பில் வெளியாகி இருந்த திகில் படம் தான் டிமான்டி காலனி 2’. இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.
அர்ச்சனா குறித்த தகவல்:
இந்த திரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து இந்த படத்தினுடைய மூன்றாவது பாகத்திலும் அர்ச்சனா நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் அர்ச்சனா கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அர்ச்சனா நடிக்கிறார். இந்த படத்தில் மகேந்திரன் மற்றும் கூல் சுரேஷ், கே பி ஒய் சரத் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

அர்ச்சனா பேட்டி:
இந்த படத்திற்கு அபிஷேக் இசையமைத்திருக்கிறார். குளோபல் பிக்சர்ஸ் அழகுராஜ் ஜெயபாலன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட அர்ச்சனா, மாதவிடாய் என்பது எந்த ஒரு வகையிலும் தீட்டு கிடையாது. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை
தாயாக மாற்றும் அடிப்படை விஷயம்.
https://www.youtube.com/watch?v=jEEUHJ9P43E
கூல் சுரேஷ் பற்றி சொன்னது:
அதில் அவமானப்பட வேண்டியதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் சென்றிருந்தபோது எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு ஒரு சகோதரராக கூல் சுரேஷ் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனவலி மாற்றங்களை புரிந்து கொள்வது ரொம்பவே அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறியிருக்கிறார்






