கடந்த 4 ஆண்டில் நான்கே இன்ஸ்டா பதிவு – மகளின் பிறந்தநாளுக்கு மட்டும் போஸ்ட் போடும் அசின். அவரது மகள் எப்படி இருக்கார் பாருங்க இப்போ.

0
1129
asin-husband
- Advertisement -

நடிகை அசின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு மலையாள நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவியின் நடிப்பில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் அசின். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் வெளியானா ‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார் அசின்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு ஏகப்பட்ட புகழை பெற்றுத்தந்தது எம் குமரன் படம் தான். அந்த படத்திற்கு பின்னர் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் நடிகை அசின், விஜய், அஜித், விக்ரம், கமல் என்று பல்வேறு முன்னனி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழில் பிஸியாக நடித்து வந்த அசின் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின் அசின் :

பாலிவுட்டில் முன்னனி நடிகர்களான அமீர் கான், சல்மான் கான் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்தார் அசின். ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின்.

அசினுக்கு பிறந்த மகள் :

திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது. அசினின் கணவரான ராகுல் ஷர்மா நடத்தி வந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீப காலமாக சாறுக்களை சந்தித்து வந்தது. இதனால் அசினின் கணவர் ராகுல், ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக் விற்பனையில் இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இன்னும் சில மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தடை செய்யப்படும் என்று ஏற்கனவே சில வதந்திகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

கணவரின் சொத்து மதிப்பு :

தற்போது ராகுல் இப்போதே பேட்டரி பைக் விற்பனையில் இறங்கி விட்டார். தற்போது ராகுலின் சொத்து மதிப்பு 1400 கோடி ருபாய் என்றும் கூறப்படுகிறது. நடிகை அசின் சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் கூட காண முடிவதில்லை. அதே போல சமூக வலைதளத்தில் கூட இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதில்லை. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட அடிக்கடி புகைப்படங்களை பதவிடுவதில்லை.

அசின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் :

கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 4 புகைப்படங்களை மட்டுமே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதிலும் தன் மகளின் முதல் பிறந்தநாள் முதல் 4ஆம் பிறந்தநாள் வரை பிறந்தநாளுக்கு மட்டுமே தன் மகளின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அசின் மகளின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertisement