அதுல்யா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் – காணாமல் போன பொருட்கள் என்ன தெரியுமா? கைதான குற்றவாளிகள்

0
292
- Advertisement -

நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் அதுல்யா ரவி. இவர் கோயம்பத்தூரை சேர்ந்தவர். இப்படி இருக்கும் நிலையில் அதுல்யாவின் வீட்டில் இருந்து பாஸ்போர்ட், 2000 ரூபாய் பணம் திருடு போய் இருக்கிறது. வீடு முழுக்கவும் பாஸ்போர்ட்டை தேடியும் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இதனால் அதுல்யாவின் அம்மா விஜயலட்சுமி அவர்கள் கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறது. விசாரணையில் அதுல்யா வீட்டில் பணிபுரிந்த செல்வி மற்றும் சுபாஷினி ஆகியோர் மீது சந்தேகம் வந்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

அதுல்யா வீட்டு திருட்டு சம்பவம்:

அப்போது செல்வி இடமிருந்து 1500 பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதற்குப் பின் இருவரையுமே போலீஸ் கைது செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாஸ்போர்ட் தொடர்பாக போலீஸ் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள். தற்போது இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அதுல்யா திரைப்பயணம்:

மேலும், நடிகை அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ என்ற படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். அழகும், இளமையும், திறமையும் இருந்த இவருக்கு இளசுகள் மூலம் கிடைத்த பிரபலம் தான் சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்புகள் கிடைத்தது. காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் இவர் ‘ஏமாளி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதுல்யா நடித்த படங்கள்:

அதன் பின்னர் இவர் நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் நடித்த ‘கேப்மாறி’ படத்தில் கூட அம்மணி இரட்டை வசனத்தை பேசியதை கண்டு ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அதுல்யா ரவி இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம்.

அதுல்யா ரவி நடிக்கும் படம்:

இருந்தாலுமே இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் அதுல்யா ரவி நடித்திருந்தார். இந்த படத்திலும் இவர் ஓவராக கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சுமாரான விமர்சனங்களை கொடுத்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து இவர் வட்டம், கடாவர் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் ‘டீசல்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement