‘ஷெண்பகமே ஷெண்பகமே’ – நடிகை பானுப்ரியாவின் தங்கையா இது ? அவருக்கு இவ்ளோ பெரிய மகன்களா ? இப்போ என்ன செய்கிறார்.

0
2879
shanthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர்கள் பானுப்பிரியா- சாந்திப்ரியா. இவர்கள் இருவருமே சகோதரிகள் ஆவர். மதுர மரிக்கொழுந்து என்ற பாடல் மூலம் எல்லோருக்கும் நினைவில் வருவது சாந்திப்பிரியா தான். இவர் எண்பதுகளின் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் சினிமாவை விட்டு விலகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பெரிய இடைவெளிக்குப் பிறகு சாந்திப்ரியா ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சரோஜினி நாயுடுவின் பயோபிக் படத்தில் சாந்திப்பிரியா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று சாந்தி ப்ரியாவிடம் பேட்டி எடுத்து இருந்தார்கள். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஸ்கூல் படிக்கும் போது என் அக்கா முன்னணி நடிகையாக இருந்தார். பள்ளி விடுமுறையில் அக்காவுடன் சூட்டிங் பார்க்க போவேன். அந்த வைப்ரேஷன் எனக்கும் பரவியது. இதனால் எனக்கும் சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசை ஏற்பட்டது. டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கங்கை அமரன் சார் என்னைப் பார்த்திருந்தார். அவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் என்னை நடிக்க கேட்டார். வீட்டில் ஏற்கனவே ஒரு நடிகை இருக்கிறது போதும் நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று என்னுடைய அம்மா கண்டிப்புடன் சொன்னார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சிவாஜி குடும்பத்தின் சொத்து பிரச்சனை – முறிந்துபோன அந்த திருமணப் பந்தம்தான் இவ்ளோ பிரச்னைக்கும் காரணமா?

அம்மாவின் பேச்சை மீறி நடித்தேன் :

இருந்தாலும், அம்மாவின் பேச்சை மீறி அந்த படத்தில் நடித்தேன். அதனால் கோபத்தில் எங்கம்மா சில காலம் என் கூட பேசவே இல்லை. அதே சமயம் என் முதல் படம் மிகப்பெரிய ஹிட்டானதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. ஒரு கட்டத்தில் என் சினிமா ஆசையை புரிந்துகொண்ட எங்கம்மா எனக்கு சப்போர்ட் பண்ணினார்கள். சினிமா இண்டஸ்ட்ரியில் என்னுடைய பெயர் பலவிதமாக மாற்றப்பட்டது. அக்காவோட இயற்பெயர் பானு. என்னுடைய அக்காவின் பெயர் பானுப்ரியா என்று மாறியது. அதேபோல் என் பெயருக்கு முன்னாடி நீ என்கிற எழுத்தை சேர்த்து நிஷாந்தி என்று மாற்றினார்கள். அப்புறமாக சாந்திப்பிரியா, ரேகா என்று டிசைன் டிசைனா மாற்றினார்கள்.

-விளம்பரம்-

திறமையால் தான் வாய்ப்பு கிடைத்தது :

தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் பாலிவுட்டிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் அக்காவின் பெயர் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. ஆனால், திறமையின் அடிப்படையில் தான் எனக்கு ஆக்டிங் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், 80, 90களில் ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் ஹீரோயினியாக நடித்த எல்லா விஷயத்திலும் அக்கா ரொம்பவே நிதானத்துடனும், பொறுமையுடனும் தான் நடந்து பாங்க. வார்த்தைகளை அளந்து தான் பேசுவார்கள். நான் அவங்களுக்கு அப்படியே நேரெதிர். மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன். எதார்த்த உண்மையை வெளிப்படையாகச் சொல்லவும் தயங்க மாட்டேன்.

ஏமாற்றிய படக்குழு :

2016இல் நடிகை லக்ஷ்மி மஞ்சுவுக்கு அம்மாவாக தெலுங்கு பட வாய்ப்பு எனக்கு வந்தது. மூன்று நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அப்புறம் அந்த டீமில் இருந்து என்னை கூப்பிடவே இல்லை. நான் போன் செய்தாலும் யாருமே பதில் சொல்லவில்லை. அதற்கு பிறகுதான் எனக்கு பதிலா வேறொரு நடிகையை ரீப்ளேஸ் பண்ணது தெரிந்தது. சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிற கெட்ட பழக்கம் இதுதான். 100 தடவைக்கு மேல் போன் பண்ணுவார்கள். தேவை இல்லைனா கண்டுக்கவே மாட்டார்கள். எதுவாயிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையா தகவல் சொல்லணும். அவாய்ட் பண்ண கூடாது. அதேபோல் உருவகேலியும், நிற பாகுபாடுகளும் சினிமா துறையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, இந்த குறைபாட்டுக்கு எதிரான குரல் நம்மூரில் ஆரம்பத்திலிருந்தே ஒலிக்கிறது.

திறமை மட்டும் தான் பார்க்க வேண்டும் :

நம்மூர் பெண்களுக்கு அதிகமாக ஆக்டிங் வாய்ப்பு கொடுக்காமல் வட இந்தியாவிலிருந்து நடிகைகளை அழைத்து வருவது சரியா? அதனால் தான் காலம் காலமாக இந்த புறக்கணிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஹீரோயினியாக நடிக்க சைஸ் ஜீரோ உடல் அமைப்புதான் அவசியம் என்பதை நான் ஒத்துக்கவே மாட்டேன். இது ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம் தான். ஆனால், சினிமாவில் நடிக்கணும் என்றால் இப்படிதான் இருக்கணும் என்கிற பொது வரையறையை திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. நிறம், உயரம், உடல் அமைப்பு, பேச்சு, நடை என ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால், திறமை மட்டும் தான் காலத்துக்கும் நமக்கு உறுதுணையாக இருக்கும்.

ரீயூனியன்களுக்கு அழைக்கப்படுவதில்லை :

அதேபோல் எண்பதுகளின் சினிமா நட்சத்திரங்களின் ரியூனியன் சந்திப்பில் என்னுடைய அக்காவும், நானும் கலந்து கொள்ளவே இல்லை. அந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் சுபாஷினி மேடத்துடன் நட்பில் தான் இருக்கேன். ஆனால், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து இதுவரை ஒருமுறை கூட எனக்கு அழைப்பு வந்தது இல்லை. என் அக்காவிடம் கேட்டதற்கு நான் பார்ட்டி பர்சன் கிடையாது. அதனால் நான் வரமாட்டேன் என்று நினைத்து என்னை கூப்பிடாம விட்டிருக்கலாம் என்று அவர்கள் சொல்வார்கள். எனக்கும் அக்காவுக்கும் இதுவரை அழைப்பு வருவதில்லை. நல்ல கதாபாத்திரம், வாய்ப்பு கிடைத்தால் திரையில் பார்க்கலாம் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Advertisement