சினிமாவில் தான் செய்த தவறு குறித்து நடிகை பானுப்ரியா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானுப்பிரியா. இவர் ஆராரோ ஆரிராரோ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 80- 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை இவர் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு காலத்தில் உச்ச நடிகையாக இருந்த இவர் பின் வாய்ப்புகள் குறைவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பானுப்பிரியா குறித்த தகவல்:
90 காலகட்டத்தில் பிரபலமான பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் சினிமா உலகில் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் மட்டும் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார் பானுப்பிரியா. இவர் வெள்ளித் திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்திருக்கிறார் .

பானுப்பிரியா பேட்டி:
கடைசியாக இவர் தமிழில் ‘அயலான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பானுப்பிரியா, நான் சில படங்களில் நடிக்க தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டேன். சொல்லும் போது என்னுடைய கதாபாத்திரத்தை பெரிதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

சினிமா பற்றி சொன்னது:
படத்தில் நடிக்கும் போது தான் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிதாக ஸ்கோப் இல்லை என்று தெரிந்தது. விருப்பமில்லாமல் தான் நான் அந்த படங்களில் எல்லாம் நடித்தேன். படம் வெளிவந்த பிறகு ஏண்டா அந்த படத்தில் நடித்தோம் என்று ஃபீல் பண்ணி எல்லாம் இருக்கேன். நடித்துக் கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்த முடியாது அல்லவா? சண்டை வரும் என்று தான் நடித்தேன். இந்த மாதிரி நான் சில படங்களில் நடித்து ரொம்ப வருத்தமெல்லாம் பட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

நாட்டியம்:
இப்படி பானுப்பிரியா சொன்ன படம் வேறு எதுவும் இல்லை கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த நாட்டியம் படம் தான். ரேவந்த் கோருக்கொண்டா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கிளாசிக்கல் டான்ஸர் சந்தியா ராஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சந்தியா ராஜு அம்மா கதாபாத்திரத்தில் தான் பானுப்ரியா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு முக்கியமான கதாபாத்திரம், மகளை உத்வேகம் செய்யும் கதாபாத்திரம் என்றெல்லாம் சொல்லித்தான் இந்த படத்தில் பானுப்பிரியாவை நடிக்க செய்திருந்தார்கள். அதற்கு பிறகு தான் அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






