தன் கணவருடனான விவாகரத்து பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை பாவனா அளித்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை விட்டு ஏவி பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து 85 நாள்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு 6 வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்னர் தான் பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
பாவனா குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்துஇருந்தார் . தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பாவனா திரைப்பயணம்:
அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. கடைசியாக இவர் தமிழில் அசல் படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது இவர் தி டோர் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். 16 வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
பாவனா
இது ஒரு பக்கம் இருக்க நடிகை பாவனா அவர்கள் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இருந்தாலும் இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிடுவதே இல்லை. இதனால் ரசிகர்கள், இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா? பிரிந்து விட்டார்களா? பாவனா விவாகரத்து கொடுக்க போகிறாரா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பாவனா, நானும் என் கணவரும் தினமும் ஜோடியாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டே இருக்க மாட்டோம். அப்படி போட்டால் அதுக்கு cringe ஆக இருக்கும். அதையும் மீறி நாங்கள் போட்டோ போட்டால் இது பழைய போட்டோ. இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இப்போதைக்கு நானும் என் புருஷனும் நன்றாக இருக்கிறோம். அப்படி ஏதாவது பிரச்சனை வந்தால் நானே சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.