அது பற்றி என்னால் விரிவாக கூற முடியாது அதற்கு காரணம் இதான் , நான் பாதிக்கப்பட்டவள் இல்லை, மீண்டு வந்தவள் – நீண்ட வருடங்களுக்கு பிறக்கு மனம் திறக்கும் பாவனா

0
574
bhavana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் பாவனா தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை ஏவி விட்டு பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று.

-விளம்பரம்-
bhavana

மேலும், இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து இருந்தது. இதற்காக இவர் 85 நாள்கள் சிறையில் இருந்து கடந்த ஆண்டு தான் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு திலீப் மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

பாவனா வழக்கு குறித்த தகவல்:

மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வி த வுமன் ஆஃப் ஆசியா கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பாவனா கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் தனக்கு நேர்ந்த அநீதி பற்றியும், அதன் பிறகு தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள்.

மனம் திறந்த பாவனா :

இதற்கு முடிவு கிடைக்கும் வரை நான் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி என்னால் விரிவாக கூற முடியாது. நான் 15 முறை நீதிமன்ற விசாரணைக்காக சென்று வந்தேன். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை நான் சொல்லி அதிலிருந்து கடந்து வந்திருக்கிறேன். நான் நிரபராதி என தெளிவுபடுத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். என் தந்தை இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஐந்தாண்டுகள் என்னுடைய பயணம் மிகவும் கடினமாக இருந்தது. பாதிப்பிலிருந்து வாழ்க்கையை நோக்கிய பயணமாக இருந்தது.

-விளம்பரம்-

பாவனாவிற்கு எதிராக நடந்த பிரச்சாரங்கள்:

சமூகத்தில் எனக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரங்கள் என்னை வேதனைப் படுத்தியது. சிலர் காயப்படுத்தியது மட்டுமில்லாமல் அவதூறு பிரச்சாரம் செய்தனர். நான் பொய் சொல்வதாகவும், இது பொய் வழக்கு என்றும் சிலர் சொல்லியிருந்தார்கள். சிலர் என் மீது குற்றம் சாட்டி இருந்தார்கள். என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது. மோசமாக வளர்க்கப்பட்டவள் என்று என் பெற்றோர்களையும் குறை சொன்னார்கள். ஒரு கட்டத்தில் இதெல்லாம் போதும் என எனக்கு நெருக்கமான என் நண்பர்களிடம் சொல்லினேன். அப்போது சிலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். பிறகு நடிகைகள் சங்கம் எனக்கு ஆதரவாக செயல்படுவது என்னுடன் பக்கபலமாக நின்றது.

உறுதியோடு போராடும் பாவனா:

அவர்களுக்கு நன்றி. நான் தொடர்ந்து போராடுவேன். நான் செய்தது தவறு இல்லை என்பதை தெளிவுபடுத்தும். எனது மரியாதையை எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இன்னும் நான் பயந்து கொண்டுதான் இருக்கிறேன். அது எதற்கு என்று என்னிடம் விடையில்லை. தொழில் மறுக்கப்பட்ட நிலை என்பது அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். அதை நான் வேண்டாமென மறுத்தேன். இந்த சமூகம் பெண்களை வேறு கோணத்தில் பார்க்கிறது. அது மாற வேண்டும். மீண்டும் வருபவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி பாவனா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement