‘1998-ல் நான் நடத்திய முதல் போட்டோ ஷூட்’ சினிமாவிற்கு வருவதர்க்கு முன் பூமிகா நடத்திய போட்டோ ஷூட்.

0
4655
bhoomika
- Advertisement -

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் ‘யுவகுடு’ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பத்ரி திரைப்படத்திற்கு பின்னர் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார். 2007 ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்திகொண்டனர்.ஆனால் திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தப்பட்டார் . அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா. இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.

எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் சினிமாவிற்கு வரும் முன்பாக எடுத்த முதல் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 1998 ல் நான் எடுத்து வைத்த முதல் அடி. என்னுடைய முதல் போட்டோ போட்டோ ஷூட். ஒரு சிறிய முயற்சி அதன் பின்னர் இப்படி ஒரு மறக்க முடியாத பயணத்தை கொடுத்தது. இந்த பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement