இரட்டை அர்த்தத்தில் பேச சொன்ன இயக்குனரை..பேச முடியாது என்று சண்டை போட்ட நடிகை..!

0
845
Bindhu Actress

விக்ரம் பிரபு கல்ராணி பிந்து மாதவி போன்றவர்கள் நடித்த “பக்கா “கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளிவந்தது. ரசிகர்கலள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தில் தான் நடிக்கும் பொது அடிக்கடி இயக்குனருடன் சண்டை போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை பிந்து மாதவி.

நடிகை பிந்து மாதவி தமிழில் கழுகு,வெப்பம்,தேசிங்கு ராஜா போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் மீண்டும் பிரபலமாகினார். இதன் மூலம் அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரத்தொடங்கினா.இதையடுத்து சமீபத்தில் வெளியான “பக்கா” பதில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். அதற்கு காரணம் அந்த படத்தில் இவரை கேட்டை வார்த்தைகளையும், இரட்டை மொழி வசனங்களையும் அடிக்கடி பேச சொல்வாராம்.

ஆனால் இதற்கு பிந்து மாதவி சம்மதம் தெரிவிக்காமல் அடிக்கடி இயக்குனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவாராம். கடைசியில் என்ன செய்வது படத்தில் கமிட் ஆகிவிட்டோம் எப்படியாவது நடித்து முடித்து கொடுத்துவிடுவோம் என்று அந்த படத்தில் நடித்தேன் என்று தெரிவித்துள்ளார் பிந்து மாதவி.

தற்போது பிந்து மாதவி அருள்நிதி நடித்து வரும் புகழேந்தி என்னும் நான் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தின் பூஜைகள் சென்ற ஆண்டே நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.