தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து நடிகை சாந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாந்தினி. இவர் பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

இதற்கிடையில் சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. 9 வருடங்களாக காதலித்த வந்த நிலையில் நடிகை சாந்தினி இடையில் கற்பமானதால் இரு குடும்பத்தினரும் அவசர அவசரமாக இந்த திருமண ஏற்பாட்டை செய்ததாக என்ற சில கிசுகிசுக்களும் உலாவி இருந்தது. திருமணத்திற்குப் பின்னர் கூட தொடர்ந்து நடித்து வந்தார் சாந்தினி. அதோடு இவர் சின்னத்திரை தொடரில் கூட நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
சாந்தினி திரைப்பயணம்:
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு என பிற மொழி படங்களில் கூட நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபயர். இயக்குனர் ஜே எஸ் கே என்பவர் இந்த படத்தை எழுதியிருக்கிறார். இந்த படத்தை சதீஷ்குமார் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு டி கே இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சாந்தினி பேட்டி:
சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் கன்னியாகுமரியில் பெண்களுக்கு எதிராக நடந்த
சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை சாந்தினி, எனக்கு 2018ல் திருமணம் ஆனது. நாங்கள் ஒன்றரை வருடம் முன்னாடியே கல்யாணத்திற்கு ப்ளான் பண்ணி செய்தோம். அந்த நேரத்தில் நான் நடித்த படங்கள் எல்லாம் கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் ஆகும் என்று நினைத்தேன்.
திருமண வாழ்க்கை பற்றி சொன்னது:
அதெல்லாம் கல்யாண சமயத்தில் தான் ரிலீஸ் ஆனது. கல்யாணத்துக்கு முன்னாடி படம் ஒருவேளை ரிலீஸ் ஆகி இருந்தால் நான் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு போக யோசித்திருப்பேன். ஆனால், கடவுளுடைய திட்டம் வேற மாதிரி இருந்தது. இப்போது அடுத்த அடுத்த படம் ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. நமக்கான எதிர்பார்ப்பு ஒரே மாதிரி இருக்கும். அந்த நேரத்தில் கல்யாணம் ஆனதனால் நம்மை பார்க்கிற விதமே ஒரு வேற மாதிரியா இருக்கும். இதனால் கேரியர் எல்லாம் பாதிக்கும் என்று நினைத்தேன். இந்த காரணத்தினால் என் கல்யாணத்துக்காக நான் இன்செக்யூரா ஃபீல் பண்ணேன்.
https://www.youtube.com/watch?v=fe6uGTQYhkE
கேரியர் பற்றி சொன்னது:
நான் என்னோட கல்யாண வாழ்க்கையில் ரொம்ப என்ஜாய் பண்ணேன். ஏன்னா, அது எனக்கு திடீரென்று எல்லாம் நடக்கவில்லை. நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த வாழ்க்கை. ஒரு விஷயத்தை லவ் பண்ணா இந்த உலகம் நமக்கு நிறைய விஷயத்தை திருப்பிக் கொடுக்கும். அப்படி எனக்கு கொடுத்தது தான் நந்தா. அவர் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுகிறார். நான் ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமாவுக்குள் வந்ததுக்கு பிறகும் அதில் தாங்கி பிடித்து நிற்கிறது கஷ்டமாக இருந்தது. நிலைத்து நிற்க நான் இன்னும் நன்றாக உழைப்பேன் என்று கூறி இருக்கிறார்.






