விஜய் டிவி மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை, காரணம் இது தானாம் – யார் தெரியுமா?

0
239
- Advertisement -

மகாநதி சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடர் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து இருந்தார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

எதிர்பாராத விதமாக சந்தானம் இறக்க மொத்த குடும்ப பாரம் கங்கா,காவேரி மீது வருகிறது. இதனால் இவர்கள் சமாளிக்கும் ப்ரச்சனை தான் சீரியல் கதை. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருந்தது. குறிப்பாக, காவேரி- விஜய் ஜோடி வந்ததிலிருந்து சீரியல் விறு விறுப்பாக செல்கிறது. தற்போது சீரியலில் விஜய்- காவிரி இருவருமே காதலிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால், இதை அவர்கள் இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை.

- Advertisement -

மகாநதி சீரியல் :

இன்னொரு பக்கம் தன்னுடைய தங்கை நர்மதா காதலுக்காக நிவீனை எப்படியோ சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைக்கிறார் காவேரி. ஆனால், நிவீனுக்கு இதில் துளி கூட சம்மதம் இல்லை. வற்புறுத்தினால் தான் இந்த கல்யாணம் செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் காவேரி-விஜய்யை பழிவாங்க அவருடைய தம்பி, விஜயின் காதலி வெண்ணிலாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், காவிரிக்கு பிறந்தநாள் என்பதால் விஜய் நிறைய சர்ப்ரைஸ்கள் கொடுக்கிறார்.

சீரியல் கதை:

காவிரியும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். அதேபோல் காவிரியின் வீட்டிலும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி சர்ப்ரைஸ்வரன் கொடுக்கிறார்கள். காவேரி ரொம்ப சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். இனிவரும் நாட்களில் வெண்ணிலா வருவாரா? காவிரி- விஜய் சேருவார்களா? நிவின்- நர்மதா நிலைமை என்ன? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கண்மணி.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய காரணம்:

தற்போது திடீரென இவர் இந்த சீரியல் இருந்து விலகி இருக்கிறார். இது தொடர்பாக அறிவிப்புமே வெளியாகி இருக்கிறது. மேலும், இவருக்கு பதில் வெண்ணிலாவாக முத்தழகு சீரியலில் நடித்த வைஷாலி கமிட் ஆகி இருக்கிறார். தற்போது கண்மணி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ராகவி என்ற தொடரில் ஹீரோயினியாக கமிட்டாகி இருக்கிறார். இதனால்தான் இவர் மகாநதி சீரியல் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

கண்மணி குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் கண்மணி அவர்கள் தொகுப்பாளர் அஸ்வந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கண்மணி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். அதற்குப்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement