என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தனர் அவர் வேடிக்கை தான் பார்த்தார்..!ரஜினியின் ‘பேட்ட’ நடிகர் மீது நடிகை அப்செட்

0
757
Petta

தற்போது பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொல்லைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சமூக வலைதளத்தில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை போலவே பாலிவுட் சினிமாவிலும் இந்த metoo சர்ச்சை கிளம்பியுள்ளது.

Nawasudin

- Advertisement -

இந்தி சினிமாவிலும் பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல இந்தி நடிகை சித்ரங்கடா சிங் “பேட்ட” படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அது இந்தி நடிகையான சித்ரங்கடா சிங் இந்தியில் ஜான் ஆப்ரஹாம், அக்ஷேய் குமார் போன்ற பலரது படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அதே போல நடிகர் நவாசுத்தீன் சித்திக்குடன் “பாபுமோஷாய் பந்தூக்பாஸ் ” என்ற படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இயக்குனர் குஷால் நந்தி படத்திற்கு தேவை இல்லாத சில காட்சிகளில் என்னை நடிக்க சொன்னார் என்றும், சேலையை அவிழ்த்துவிட்டு ஜாக்கெட்டின் ஊக்கை கழற்றிவிட்டு ஹீரோவான நவாசுத்தீன் சித்திக்கியின் மீது ஏறி அமர்ந்து என்னை நானே தடவ வேண்டும் என்று என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தனர் என்றும் கூறியதாக நடிகை சித்ரங்கடா சிங் கூறியுள்ளார்.

Nawasuddin

இதனை தான் மறுக்கவே இயக்குநர் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். இதில் கொடுமை என்னவெனில் இயக்குனர் என்னை அவமானபடுத்தியபோது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த படத்தின் ஹீரோவான நவாசுத்தீன் சித்திக்கி எதுவும் கேக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்று மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார் நடிகை சித்ரங்கடா சிங்.

Advertisement