+2 தேர்வில் தேவயானியின் மகள் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாரா? குவியும் வாழ்த்துக்கள்

0
2125
Devaiyani
- Advertisement -

பிளஸ் 2 தேர்வில் நடிகை தேவயானி மகள் வாங்கி இருக்கும் மதிப்பெண் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தற்போது வரை இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

தேவையானி திரைப்பயணம் :

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின் தேவையானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர இவர் பல தொடர்களிலும் நடித்து வருகிறார். அதிலும் இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் தொடரில் நடித்தும், நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்:

அதுமட்டும் இல்லாமல் தேவையானி தங்களுடைய சொந்த ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் நடிகை தேவயானி மகள் வாங்கி இருக்கும் மதிப்பெண் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது தமிழகமே பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண்கள் பற்றி தான்.

-விளம்பரம்-

தேவையானி மகள் மதிப்பெண்:

சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் நடிகை தேவயானி மகளும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். அதில் அவர் 600க்கு 498 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement