இயக்குனர் அகத்தியனின் சொந்த ஊரில் கடை திறப்பு விழாவிற்காக சென்ற இடத்தில் தேவையாணி செய்துள்ள நெகிழ்ச்சி செயல்

0
311
- Advertisement -

பிரபல நடிகை தேவயானி செய்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை தேவயானி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணியில் புதிய உணவகத்தை திறந்து வைப்பதற்காக நேற்று ஜனவரி மாதம் 1 ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு முன்னதாக புதிய உணவகத்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதைத் தொடர்ந்து, தன்னை சினிமாவில் பிரபலம் அடைய வைத்த திரைப்படம் ஆன ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இயக்குனர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி என்பதை அறிந்த நடிகை தேவயானி, அங்கிருந்தவர்களிடம் அது குறித்து விசாரித்து இயக்குனர் அகத்தியனின் பூர்வீக வீட்டிற்குச் சென்று இருக்கிறார். இயக்குனர் அகத்தியன் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் வசித்து வரும் அகத்தியனின் சகோதரியை தேவயானி நேரில் சந்தித்து இருக்கிறார்.

- Advertisement -

தேவயானியின் செயல்:

அதோடு, அகத்தியனின் சகோதரியிடம் நலம் விசாரித்தும் இருக்கிறார். தனது வீட்டிற்கு தேவையானி வந்ததை அறிந்த இயக்குனர் அகத்தியனிடம் செய்தியாளர்கள் தொலைபேசியில் பேசியபோது, சினிமாவில் நன்றி மறவாத நடிகைகளில் தேவயானியும் ஒருவர். அவர் என் மகளைப் போன்றவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் கோட்டை:

1996 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான படம் தான் ‘காதல் கோட்டை’. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம். இந்த படத்தில் அஜித்துடன் தேவயானி, ஹீரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படம் இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடும் படமாக உள்ளது.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஊட்டியில் இருக்கும் கமலிக்கும் சென்னையில் வசிக்கும் சூர்யாவுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல் மலர்கிறது. கடிதங்கள் மட்டுமே இவர்களின் காதலுக்கு பாலமாய் இருக்கும். இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் கூறிய போது யாரும் படத்தை எடுக்க முன்வரவில்லை. பார்க்காமல் எப்படி காதலிப்பார்கள் என்றும் படத்தில் லாஜிக் இல்லை என்றும் கூறிப் பலர் படத்தை நிராகரித்துள்ளனர்.

பல விருதுகளை அள்ளிக் குவித்தது:

அதன் பின் இயக்குனர் அகத்தியன் ஏற்கனவே இயக்கிய ‘வான்மதி’ படத்தின் தயாரிப்பாளரே இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். தயாரிப்பாளர் சொன்னபடி, படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் அதாவது இருவரும் சேர்வது போல் இயக்குனர் மாற்றி இருக்கிறார். இப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் தேவாவின் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்களின் ஃபேவரைட் தான். இப்படம் பல விருதுகளை அள்ளிக் குவித்ததோடு, இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement