இந்த காரணத்தால் தான் சாய் பிரசாந்த் தற்கொலை பண்ணிகிட்டான் – பல ஆண்டு கழித்து கூறிய ஆனந்தம் சீரியல் நடிகை.

0
1094
devikripa
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தேவி கிருபா. இவர் கிட்டத்தட்ட சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இவர் சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக தான் உள்ளார். தற்போது இவர் வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிச்சன் கில்லாடிகள் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவருடைய மீடியா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

நான் பதிமூன்று வயதில் மீடியாவிற்குள் வந்தேன். நான் நினைத்த எதையுமே என்னால் பண்ண முடியவில்லை. எனக்கு டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். அதனால் ஐந்து வருடத்திற்கு முன்னாடி அதை விரும்பி கற்றுக்கொண்டேன். இப்ப நான் ஆசைப்பட்ட மாதிரியே ஸ்டைலிஸ்ட் ஆகிவிட்டேன். எனக்கு பிடித்த மாதிரி என் ஆடைகளை நானே டிசைன் செய்ய ஆரம்பித்துவிட்டேன். நான் நிறைய சீனியர் ஆர்டிஸ்ட் உடன் நடித்து இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இந்த பொண்ணு புதியவர் என்று என்னை என்னைக்குமே ட்ரீட் பண்ணினது கிடையாது.

- Advertisement -

நடிகை தேவி கிருபா அளித்த பேட்டி:

அதிலும் ஆனந்தம் சீரியல் டீம் உடன் இன்னைக்கு வரைக்கும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சின்ன வயதிலேயே பெரிய பெரிய ஆட்களுடன் நடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. மேலும், இந்த இந்த மூன்று வருடத்தில் நடிகர் சங்கத்தில் நடக்கும் அரசியல் என்னென்ன என்பதை பார்த்துவிட்டேன். ஏனென்றால், இதற்கு வரதுக்கு முன்னாடி உயிர்கொடுத்து அண்ணனாக, நண்பனாக இருந்தவர்கள் எல்லோருமே இதற்குள் வந்தபிறகு எப்படி பட்டவர்கள் என்பதை காட்டி விட்டது.

வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள்:

அரசியலுக்கு வந்தால் எல்லோரையும் இழக்கணம் என்று தெரிந்துகொண்டேன். எல்லோருமே உண்மையானவர்களாக இருக்கிறது இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அது வரைக்கும் என்னை தங்கை என்று சொன்னவர்களே என்னை பற்றி தப்பா பேசினார்கள். அந்த அளவுக்கு பதவிக்காக மாறி இருக்கிறார்கள். இதை துரோகம் என்று சொல்வதைவிட பதவி மோகம் என்றுதான் சொல்லணும். மேலும், நேரடியாகவே என்னை மிரட்டி இருக்கிறார்கள். எலக்சன் இந்த முறை நடக்குமா? என்று தெரியவில்லை. எங்க மேல குற்றம் சுமத்தியவர்கள் நேரடியாக மீடியாவில் அதற்கான எவிடன்ஸ் கொடுத்திருக்கலாம்.

-விளம்பரம்-

நடிகர் சங்கம் தேர்தல் குறித்து கூறியது:

அப்படி இல்லை என்றால் அது பொய் என்று தெரிகிறது. மற்ற சங்கங்கள் எல்லாம் பார்க்கும்போது எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரு ஆர்டிஸ்ட்க்கு பிரச்சனை என்றால் எல்லோரும் எந்த அளவுக்கு குரல் கொடுக்கிறார்கள் என்று பார்க்க முடிகிறது. நான் இருக்கும் எங்க டீம் அப்படி பட்டது தான். எங்க டீம் நிறைய நல்லது பண்ணுகிறார்கள். எல்லாமே சரியா பண்ணனும் என்று நான் சொல்லவில்லை. தவறுகள் இருக்கு. ஆனால், அதைத் திருத்திக் கொள்ளனும். இங்கே முதலில் ஒற்றுமை இல்லை. எங்களை நல்லது பண்ண விடக்கூடாது என்பது தான் அவர்களுடைய நோக்கம்.

நடிகர் சாய் பிரசாந்த் குறித்து கூறியது:

அதேபோல் நடிகர் சாய் பிரசாந்த் ரொம்ப போல்டான கதாபாத்திரம்தான். சாப்பாடு இல்லாமல் பணம் இல்லாமல் தான் அவன் இருந்ததற்கு காரணம். மனைவியுடன் பிரச்சனை, சம்பளப் பிரச்சினையால் தான் இறந்ததாக அவன் லெட்டரில் எழுதி வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். பண ரீதியாக இந்த துறையில் எந்த பிரச்சனையும் நான் எதிர்கொள்ளவில்லை. அதுக்கு நான் ஒர்க் பண்ண எல்லா இயக்குனர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். எனக்கு என்ன பிரச்சனை என்று எல்லோருக்கும் தெரியும். என் அம்மா என் மேல கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தார்கள். என் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளுக்கு என் அம்மா தான் காரணமே தவிர இந்தத் துறையும் மத்தவங்களும் காரணம் இல்லை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement