‘சொன்னது நீதானா, சொல் சொல் என்னுயிரே’ மறைந்த நடிகை தேவிகாவின் 77-வது பிறந்த தினம் இன்று.

0
1430
Kanaga
- Advertisement -

தன்னுடைய தாய் தேவிகா பெயரில் அறக்கட்டளை தொடங்க இருப்பதாக கனிகா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தேவிகா. இவர் 60,70 காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் பிரமிளா தேவி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியில் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். 70 காலகட்டத்தில் மிக சிறந்த நடிகையாக தேவிகா திகழ்ந்தார். இவர் தன்னுடைய அழகிய கண்களால் நடித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர்.

- Advertisement -

தேவிகா குறித்த தகவல்:

‘சொன்னது நீதானா.. சொல்..சொல்.. என்னுயிரே..’ என்று சிதார் இசைக் கருவியை நிமிர்த்தி வைத்து, அதை இசைக்கும் தன் விரல் அசைவுகளில் கூட சோகத்தின் மென் நடனத்தை வெளிப்படுத்தியபடி தேவிகா பாடிய பாடலை 80 ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்கமாட்டார்கள். இதனிடையே இவர் தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டார்கள். இவருடைய ஒரே மகள் தான் நடிகை கனகா. இவர் வேற யாரும் இல்லை கரகாட்ட நாயகி கனகா தான். தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் கனகா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

கனகா அளித்த பேட்டி:

பின் கனகாவின் அம்மா தேவிகா 2002 ஆம் ஆண்டு தன்னுடைய 59 வயதில் உடல்நிலை குறைவால் இருந்துவிட்டார். இன்று இவருடைய பிறந்தநாள். இந்நிலையில் தேவிகாவின் மகளும், நடிகையும்மான கனகா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர், என்னுடைய தாய் 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அன்றைக்கு கூட என்னுடைய அப்பா வரவில்லை. என்னைப் பற்றி அவதூறாக பேட்டி எல்லாம் தந்திருக்கிறார்.

-விளம்பரம்-

தன் அம்மா குறித்து சொன்னது:

எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார். என்னுடைய அம்மா கஷ்டப்பட்டு தான் என்னை வளர்த்தார். அவர் இறப்பதற்கு முன்பு சொத்துக்களை எல்லாம் எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கில் சொத்துக்கள் எனக்கு தான் சேரும் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இன்னும் கூட என்னுடைய தந்தை என்னைப் பற்றியும் மறைந்த என்னுடைய அம்மாவை பற்றியும் தவறாகத்தான் பேசிக்கொண்டு வருகிறார்.

தாய் பெயரில் கனகா நடத்தும் அறக்கட்டளை:

என்னுடைய தாய் எழுதிய உயில் வழியாக வரும் சொத்து மூலம் பணத்தில் 3 சதவீதம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு செலவிடுகிறேன். விலங்குகள் நலனுக்கும் இதை பயன்படுத்துகிறேன். விரைவில் என்னுடைய அம்மா தேவிகா பெயரில் அறக்கட்டளை தொடங்க இருக்கிறேன். அதன் மூலம் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேன். நான் இறந்த பிறகு என்னுடைய உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement