திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து லட்சங்களை ஏமாற்றிய நடிகை திவ்ய பாரதி – புகார் அளித்த யூடுயூப் ஓனர்.

0
955
divyabharathi
- Advertisement -

திண்டுக்கல் யூடியூபரிடம் துணை நடிகை திவ்யா பாரதி பண மோசடி செய்து இருப்பதாக எழுந்துள்ள புகார் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவர் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். மேலும், சினிமாவில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

அப்போது ஏஜென்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பை சேர்ந்த திவ்யா பாரதி என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். இவர் உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். இதனையடுத்து இவரை வைத்து கவிதைத் தொகுப்பினை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார் பகலவன் ராஜா. இதை தொடர்ந்து திவ்யபாரதி பகலவன் ராஜாவை அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

திவ்யா பாரதி ஏமாற்றிய வாங்கிய பணம்:

பின் திவ்யா பாரதி தன்னுடைய குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று குடும்ப ரீதியாக நட்பாக பழகி இருக்கிறார். அதோடு அவரை திருமணம் செய்வதாக கூறி பல தவணைகளில் பணம் வாங்கியிருக்கிறார். இவர் 50 லட்சம் பணமும், 10 சவரன் தங்க நகைகளையும் வாங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனியாக வீடு எடுத்து அதற்குத் தேவையான பர்னிச்சர் உள்ளிட்ட பல பொருள்களை 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பகலவன் ராஜா செலவு செய்திருக்கிறார்.

பகலவன் ராஜா அளித்த புகார்:

ஆனால், திவ்ய பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பகலவன் ராஜா திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து திவ்ய பாரதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி திவ்யபாரதி ஏற்கனவே பல நபர்களுடன் தொடர்பில் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பகலவன் ராஜா தான் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும், படத்தில் நடிக்க வைப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக திவ்யபாரதி புகார் அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பகலவன் ராஜா-திவ்ய பாரதி உரையாடல்:

திவ்யபாரதி இடம் தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் அவரிடம் தான் நான் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறேன் என்றும் பகலவன் ராஜா கூறியிருக்கிறார். மேலும், இதுதொடர்பாக திவ்யபாரதி தன்னுடன் பேசிய உரையாடல்களையும், சுமார் 10க்கும் மேற்பட்ட ஆடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோக்களில், திவ்ய பாரதியைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர் பொண்டாட்டி என்று பேசி இருக்கிறார். அதற்கு திவ்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என பதிலளித்திருக்கிறார்.

மோசடி செய்த திவ்ய பாரதி:

பின் தான் ஏமாற்றப்பட்டது குறித்து பகலவன் ராஜா, திவ்யபாரதியிடம் கேட்டபோது, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நீங்கள் கூடுதல் செலவு செய்திருக்கலாம். நான் ஒன்றும் சும்மா பணம் வாங்கவில்லை. உங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். உங்களுக்கு பிடித்தது போல நடந்திருக்கிறேன். நிறைய அட்ஜஸ்ட் செய்து இருக்கிறேன். ர் இத்தனை நாள் பழகிய எனக்கு டூ வீலர் மற்றும் கார் வாங்கி தருகிறேன் என்று சொன்னீர்களே? இதுவரை வாங்கித் தந்தீர்களா? என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து திவ்யபாரதியை காவல்துறையினர் மோசடி வழக்கில் கைது செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement