பிளடி பெக்கர் படம் குறித்து நடிகை திவ்யா விக்ரம் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் வளர்ந்து இருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பிளடி பெக்கர். இந்த படத்தை நெல்சன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் முத்துகுமார் என்பவர் தான் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
நடிகை திவ்யா விக்ரம்:
மேலும், இந்த படத்தில் நடிகை திவ்யா விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் வேற யாரும் இல்லை, சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர் தான். மாடல், நடிகை, டான்ஸர் என்ற பல பரிமாணங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் திவ்யா விக்ரம், சோசியல் மீடியா மூலம் தான் எனக்கு பிளடி பெக்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
படம் வாய்ப்பு:
முதலில் எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்தார்கள். இருந்துமே இயக்குனர் சிவபாலனுக்கு திருப்தியே இல்லை. அந்த கதாபாத்திரத்துக்கு நான் இளமையாக இருக்கிறேன் என்று சொல்லி ரிஜெக்ட் செய்து விட்டார்கள். அந்த வாய்ப்பு கை நழுவி போனதை நினைத்து நான் ரொம்ப வருத்தத்தில் இருந்தேன். பின் அவர்கள் என்ன நினத்தார்கள்? தெரியவில்லை மீண்டும் என்னை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்து ஓகே செய்தார்கள்.

உருவகேலி குறித்து சொன்னது:
மேலும், பிளஸ் சைஸ் சொன்னாலே காமெடி கதாபாத்திரம் தான் என்ற எண்ணம் வரும். ஆனால், அதை எல்லாம் உடைத்து வேறொரு திவ்யாவாக இந்த படத்தில் என்னை காண்பித்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காரணம், என்னுடைய முதல் படம் ருத்ரனில் என்னை யானையுடன் ஒப்பிட்டு இருக்கும் படியான நகைச்சுவை காட்சி எல்லாம் இருந்தது. ஆனால், அது சென்சாரில் நீக்கப்பட்டது. பின் பட தயாரிப்பிலும் இது தொடர்பாக என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. இப்போது நிறைய பிளஸ் சைஸ் மாடல் என்னை பார்த்து சோசியல் மீடியாவில் வந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு நிறைய சந்தோஷம்.
https://www.youtube.com/watch?v=DIUtox4vX_M
தன்னம்பிக்கை குறித்து சொன்னது:
பொதுவாகவே காதல் செய்யும் போது பிளஸ் சைஸ் என்றால் ஓகே. ஆனால், கல்யாணம் வந்தால் பிளஸ் சைஸ் இவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் என்னை பார்த்து நெகடிவ் ஆக கமெண்ட் செய்பவர்கள். அதை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. இது நம்முடைய வாழ்க்கை. பிறருக்கு பயந்து நமக்கு விருப்பப்பட்டதை செய்யாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. நமக்கு தோன்றிய விஷயத்தை செய்தால் போதும். நான் என்னைக்கும் என்னுடைய உடல் எடையை நினைத்து வருத்தப்பட்டதும் கிடையாது என பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்து இருக்கிறார்.






