தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.பின்னர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் நிகழ்ச்சியை பரவை முனியம்மா தான் தொகுத்து வழங்கியுள்ளார். இவருடைய நாட்டுப்புறப் பாடலுக்கு பல பேர் அடிமை என்று கூட சொல்லலாம்.
நாட்டுப்புற பாடல்களுக்கு நம் இந்தியாவில் மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் கூட ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.அதை கருதி தான் சினிமா திரை உலகமும் நாட்டுப்புற கலைகளை பல வழிகளில் கொண்டு வருகிறது. தற்போது முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கூட நாட்டுப்புற கலைகளைப் பற்றி சிறப்பாகக் கூறி இருந்தார்கள். அதில் சிறந்து விளங்கியவர் தான் நம்ப பரவை முனியம்மா.
சினிமா துறையில் பல பிரபலங்கள் இவரை அம்மாவாக, பாட்டியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவர் நாட்டுப்புறக்கலை மட்டுமல்லாமல் நகைச்சுவை, நடிப்பு என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றும் தன்னுடைய நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார். பரவை முனியம்மா சினிமா உலகம் மட்டும் தான் நமக்கு தெரியும்.ஆனால், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களும், வேதனைகளும் நிறைந்து உள்ளது.
இப்படி புகழ் ஓங்கியிருந்த பரவை முனியம்மா என்று சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் வயது முதிர்ந்த நிலையில் நோய் காரணமாக வறுமையில் வாடி இருந்தார். டந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகர் அபி சரவணன் அது மட்டுமல்லாமல் நடிகர் அபி சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து, உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார்.
தொடர் சிகிச்சை மூலம் பறவை முனியம்மா உடல் நலம் தேறி வருவதாகவும் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பறவை முனியம்மா குறித்து பதிவிட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் ‘மாயநதி’ படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார். நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் பரவை முனியம்மா உடல் நிலை சரியில்லாததால் காலமாகியுள்ளார்.