‘மௌனம் பேசியதே’ சீரியலில் இருந்து ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகிய நிலையில், புதிதாக கமிட் ஆகியுள்ள கவின் பட நடிகை

0
213
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மௌனம் பேசியதே’ சீரியலில் நடிக்க போகும் புதிய கதாநாயகி குறித்த தகவல்தான் தற்போதைய இணையத்தின் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு சேனலிலும் புது புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்கள் தற்போது டிஆர்பியில் முன்னேறி வருகிறது. இத்தொலைக்காட்சியில் கொஞ்சம் டல் அடிக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்து உடனே புதிய சீரியல்களை தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர் தான் மௌனம் பேசியதே. இந்த சீரியலில் கதாநாயகனாக அசோக் குமார் நடிக்கிறார்.

- Advertisement -

மௌனம் பேசியதே:

இவர் ஏற்கனவே கோழி கூவுது, காதல்சொல்ல ஆசை, விழித்தெழு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த சீரியலில் கதாநாயகியாக, நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கமிட் ஆனார். ஜோவிதா முதலில் ‘கலாசல்’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின், சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்திருந்தார். இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. பின், உயர்கல்வி படிப்பை தொடர்வதற்காக அந்த சீரியலில் இருந்து ஜோவிதா விலகி இருந்தார்.

ஜோவிதா விலகினார்:

அதன் பின், ஜோவிதா மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அருவி’ தொடரில் நடித்திருந்தார். கடந்த ஆண்டுதான் இந்த சீரியல் முடிவடைந்தது. இதையடுத்து தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘மௌனம் பேசியதே’ தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரை மகிழ் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற தொடரை தயாரித்து இருந்தது. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஜோவிதா சொன்ன காரணம்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்திருந்தார். இது தொடர்பாக இவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. ரொம்ப சுயநலமான நம்ம கலாச்சாரத்திற்கு எதிரான ரோல் போல தான் அது இருக்கிறது. இதில் நடிப்பது எனக்கு சரி என்று தோன்றவில்லை. கடந்த சில மாதங்களாகவே நான் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் டாக்ஸிக்காக மாறி இருக்கிறது.

புது கதாநாயகி யார்:

மேலும், வாழ்க்கை என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதை கடைப்பிடிக்க நான் அதிக முயற்சித்தாலும் முடியவில்லை. ஆனால், நான் மௌனம் பேசியதே சீரியலில் இருந்து விலகுகிறேன். நான் மீண்டும் இன்னொரு ப்ராஜெக்டில் சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது ஜோவிதா விலகிய நிலையில், மௌனம் பேசியதே சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் இனி நடிகை பௌஸி நடிக்க இருக்கிறாராம். இவர் ஏற்கனவே தட்றோம் தூக்குறோம், ஸ்வீட் ஹார்ட், டாடா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement