தமிழில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி ஆகிய தமிழ் திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார் இவர் சமீபத்தில் வெளியான Super Deluxe என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பக்கத்து வீட்டு பெண் போல தோற்றம் அழகான நடிப்பு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்திருகிறார் காயத்ரி. ஆனால். சமீபத்தில் நடிகை காயத்ரி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு ரசிகர்கள் படம் பார்க்கும் முறையை விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தற்போது படத்தை ரசிகர்கள் பார்க்கும் விதம் முற்றிலும் மாறியுள்ளது என்பது தான் உண்மை. தற்போது வெளியாகும் படங்களில் அது பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும், படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டு விடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க விமர்சனம் என்ற பெயரில் படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தையும் பலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் ரசிகர்களின் படம் பார்க்கும் எண்ணம் மாற வேண்டும் என்று காயத்ரி கருத்து கூறியுள்ளது தான் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள காயத்ரி ,ஒரு படத்தில் எப்படி பின்னனி இசை இருகிறது , கேமரா எப்படி இருக்கிறது, முதல் பாதியில் எப்படி நடித்திருக்கிறார்கள், இரண்டாம் பாதியில் எப்படி நடித்திருக்கிறார்கள் என்றல்லாம் பார்ப்பீர்களா ? ஒரு படம் எப்படி நம்மை உணர வைக்கிறது என்று பார்த்த நாட்களுக்கு நான் திரும்பி நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,இந்த பதிவினை கண்ட ரசிகர் ஒருவர், படத்தினை விமர்சனம் செய்பவர்கள் அவசரத்தில் அவர்களது விமர்சனங்களை பதவு செய்கின்றனர். ஆனால், ஒரு படத்தை பார்த்து விட்டு சிறிது நாட்கள் காத்திருந்து நாங்கள் உணர்ந்ததை வார்த்தைகளாக பதவி செய்கிறோம் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த காயத்ரி, நான் விமர்சனங்களை மட்டும் சொல்லவில்லை படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட இப்படியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். முன்பு இருந்த காலத்தில் எல்லாம் எம்ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு இருந்தா மட்டும் தான் படம் பார்ப்பார்கள்.
ஆனால், தற்போது சினிமாவில் எடுக்கப்படும் படத்தில் என்ன கதை இருக்கிறது? இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளலாம்? என்று பார்க்கும் அளவிற்கு வளர்ந்து பொற்காலமாக மாறிவிட்டது சினிமா உலகம் . இது தவறில்லை ஆனால் தமிழ் ரசிகர்கள் இப்படி எல்லாம் படங்களை குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர் ஒருவர், அது எம்ஜியார் பாட்டு சிவாஜி பாட்டு என படம்பார்த்த காலம்..இப்போது சினிமா அறிவு பெற்றகாலம்..தவறில்லை என்று பதிலளித்துள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை எழுதி வருகின்றனர் ரசிகர்கள். மேலும்,ஒரு சில ரசிகர்கள் காயத்ரியின் இந்த கருத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.