வேறு கதாப்பாத்திரம்.! அந்த கதாபாத்திரத்தில் என்னை ஏத்துக்க மாட்டாங்க! ராஜா ராணி சீரியல் நடிகை

0
1518
- Advertisement -

பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகபாவனையால் சீரியல் ரசிகர்களை ஈர்த்துவருபவர், கீதாஞ்சலி. தற்போது, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘ராஜா ராணி’ போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசுவதற்கு முன்னர் குட்டி பயோ…

-விளம்பரம்-

geetha-anjali

- Advertisement -

பெயர்: கீதாஞ்சலி
அறிமுகமான சீரியல்: நாதஸ்வரம்
தற்போது: ராஜா ராணி, நிறம் மாறாத பூக்கள்
ஃபேமிலி ஸ்பெஷல்: நானும் என் கடைசி தங்கச்சியும் சீரியலில் நடிக்கிறோம்.
பிடித்த கதாபாத்திரம்: பாஸிட்டிவ், நெகட்டிவ்
எதிர்காலத் திட்டம்: நடிப்புத்தான் வேறென்ன!

”என் சொந்த ஊர், காரைக்குடி. எங்க வீட்டுல நான்தான் மூத்த பொண்ணு. எனக்கு அடுத்து இரண்டு சகோதரிகள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிருந்த நேரத்தில், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவங்க மூலமா சீரியல் வாய்ப்பு வந்தது. எனக்கும் சின்ன வயசிலிருந்து நடிக்கும் ஆசை இருந்துச்சு. அதனால், உடனே ஓகே சொல்லிட்டேன். ‘நாதஸ்வரம்’ எனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அதில் எனக்குத் தங்கச்சியா நடிச்சது என் சொந்த தங்கச்சியேதான்” என்றவரிடம், ‘இப்போ அவங்க என்ன பண்றாங்க?’ எனக் கேட்டோம்.

-விளம்பரம்-

அவளுக்குப் படிப்பு முடிஞ்சதும் நல்ல வரன் அமைஞ்சது. எனக்கு அப்புறம்தான் தங்கச்சிக்கு திருமணம் செய்யணும்னு அம்மா சொன்னாங்க. ஆனால், எனக்கு சீரியலில் இன்னும் பேர் வாங்கணும்னு கனவு இருந்ததை எடுத்துச் சொன்னேன். அம்மாவும் அதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. தங்கச்சிக்குத் திருமணம் செஞ்சுவெச்சோம். இப்போ, மூன்றாவது தங்கச்சி, சீரியல்களில் நடிக்கிறாங்க. அவங்களைப் பற்றி சொல்லட்டுமா?” எனப் புன்னகைத்துத் தொடர்கிறார் கீதாஞ்சலி.

geetha

”என் கடைசி தங்கச்சி பெயர், ஐஸ்வர்யா. ”னைக்கத் தெரிந்த மனமே’ உள்பட பல சீரியல்களில் கலக்கிட்டிருக்காங்க. காஸ்டியூம் விஷயத்துல நான் கொஞ்சம் வீக். என் தங்கச்சிதான் எனக்கு ஷூட்டாகும் காஸ்டியூம்ஸை செலக்ட் பண்ணிக்கொடுப்பாங்க. நான் ஷூட்டிங் இருக்கிறப்போ மட்டும்தான் சென்னைக்கு வருவேன். மற்ற நேரங்களில் காரைக்குடியில்தான் இருப்பேன். இப்போ, ‘ராஜா ராணி’ சீரியலில் நடிச்சுட்டிருக்கேன். அந்த சீரியலில் ‘வினோ’ கதாபாத்திரத்துக்கு மாற்றா வந்திருக்கேன். இதுவரை அந்தக் கதாபாத்திரத்தில் ஒருவரைப் பார்த்தவங்களுக்கு சட்டென என் முகம் வித்தியாசமாகத் தெரியும். அந்தக் கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏத்துக்க கொஞ்சம் டைம் ஆகும். எனக்கு முன்னாடி அந்தக் கதாபாத்திரத்தில் நடிச்சவங்க என்ன மாதிரியான காஸ்டியூம்ஸ் போடுவாங்கன்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். அவங்க மாதிரியே என்னால் பண்ண முடியாது. ஆனால், நிச்சயமா என்னோட பெஸ்ட்டை கொடுப்பேன்.

இது எல்லாத்தையும் புரிஞ்சுட்டுத்தான் இந்த சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். எல்லா செட்டுலேயும் கலகலன்னுதான் இருப்பேன். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். என் வீட்டுல ‘பைரவா’ என ஒரு பெட் இருக்கான். அவனை நாயாகவே நான் நினைக்கிறதில்லை. என் தம்பி மாதிரி நினைக்கிறேன். ஷூட் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் அவனோடு விளையாடுவேன். அவன்தான் என் ஸ்டிரெஸ் பஸ்டர்.

geetha anjali actress

எனக்குப் பொம்மைகள் ரொம்ப பிடிக்கும். என் பிறந்தநாளுக்கு எங்க வீட்டுல பொம்மையில் ரெடி பண்ணின கேக் கொடுத்துதான் என்னை சர்ப்ரைஸ் பண்ணாங்க. வீட்டின் மூத்த பொண்ணா இருந்தாலும், இப்பவும் ஒரு குழந்தை மாதிரிதான் என்னை எல்லோரும் நடத்தறாங்க. ‘நரை’ என்கிற ஒரு சினிமாவிலும் நடிச்சிருக்கேன். நல்ல கதாபாத்திரம் கிடைச்சால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க டபுள் ஓகேங்க” என்கிறார் கீதாஞ்சலி.

Advertisement