நடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது..! இவ்ளோ பெரிதாக வளந்துட்டாரே..! புகைப்படம் உள்ளே

0
3210
jenilea

தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் ஷங்கர்.

Genelia D'Souza

அதன் பின்னர் இவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.

பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். சில ஆண்டுகளாக தனது இளைய மகனை கேமராவின் கண்களுக்கு காண்பிக்காமல் இருந்தனர் இந்த பாலிவுட் திம்பதியினர்.

இந்நிலையில் தனது இளைய மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் சென்றுள்ளது. தனது மகனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியாதுடன் தனது இரண்டு வயது மகனுடன் கியூட் புகைப்படங்களை எடுத்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜெனிலியா.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.